தமிழகம்

5 நகரங்களில் வெயில் சதம்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் மதுரை, கரூர் உட்பட 5 நகரங்களில் வெப்பநிலை சதமடித்தது.

நேற்று அதிகபட்சமாக மதுரையில் 106 பாரன்ஹீட் வரை வெப்பநிலை பதிவானது. தொடர் வெப்பத்தை தகிக்க முடியாமல் மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். இந்நிலையில் கடற்காற்று நிலப்பகுதியை நோக்கி வீசத் தொடங்கியதால் வெப்பம் குறைந்துள்ளது.

மாநிலத்தில் கரூர், மதுரையில் தலா 102, திருச்சியில் 101, திருத்தணி, சேலத்தில் தலா 100 பாரன்ஹீட் வெப்பநிலை நேற்று பதிவானது. மறுபுறம் திண்டுக்கல், நெல்லை, கன்னியாகுமரி, கோவை, நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.

SCROLL FOR NEXT