தமிழகம்

ஹாட்லீக்ஸ்: அமித் ஷாவை முந்திய ராஜா!

செய்திப்பிரிவு

 பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா அமித் ஷாவை முந்திக்கொண்டு தன்னிச்சையாக தமிழக பாஜக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக வட்டாரத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

டெல்லியிலிருந்தும் ராஜாவிடம் விசாரணை நடந்ததாம்.

அதனால் மறுநாளே, “அது ஊகத்தின் அடிப்படையில் வெளியான தகவல்” என்று மழுப்பினார் ராஜா.

இதற்கு முன்பாக வேட்பாளர் தேர்வு குறித்த ஆய்வுக்கூட்டம் மதுரையில் நடந்தபோது, “முக்குலத்தோர் தொகுதியான சிவகங்கையில் நீங்கள் நிற்பது வேஸ்ட்” என கட்சி நிர்வாகி ஒருவர் நேரடியாகவே கருத்துச் சொன்னாராம். “அப்படினா, நம்ம தொகுதியில துணை முதல்வர கூட்டியாந்து பிரச்சாரம் பண்ணச் சொல்லுவோமாப்பா” என்று ராஜா குத்தலாய் கேட்க, “நல்லா கூட்டிட்டு வாங்க... நீங்க கூப்புட்டாதான் அவரு எங்க வேணும்னாலும் வருவாரே” என்று அவர் பாணியிலேயே பதில் கொடுத்தாராம் அந்தப் பொறுப்பாளர்.

SCROLL FOR NEXT