தமிழகம்

ஹாட்லீக்ஸ் : கலையைக் கண்காணித்த தினகரன்!

செய்திப்பிரிவு

கலைராஜன் களம் மாறப் போகிறார் என்ற தகவல் இருபது நாட்களுக்கு முன்னதாகவே தினகரன் காதுக்குப் போய்விட்டதாம். இருந்தாலும் அவசரப்படாத தினகரன், கலைராஜனின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க உளவாளி ஒருவரை நியமித்தார்.

தொடர்ச்சியாக தினகரனின் அலைபேசி அழைப்புகளை நிராகரித்து வந்த கலைராஜன், ஸ்டாலினைச் சந்திப்பதற்காக 20-ம் தேதி மாலை 5 மணிக்கு திருச்சி சங்கம் ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தார்.

இந்தத் தகவலும் உளவாளி மூலம் உடனடியாக தினகரன் காதுக்குப் போக, கடைசியாக ஒருமுறை கலைக்கு போன் செய்தாராம் கரன். நோ ரெஸ்பான்ஸ் என்றதும், உடனடியாக நீக்கல் அறிவிப்பை வெளியிட்டுவிட்டாராம்.

மறுநாள் காலையில் ஸ்டாலினைச் சந்தித்து திமுகவில் இணைந்துவிட்டார் கலை!

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT