ராஜகண்ணப்பன் வேறு ஒரு கட்சிக்கு ஆதரவு என்று போய்விட்டதால், அதிமுகவுக்கு எந்த இழப்பும் இல்லை. ஒரேயொரு ஓட்டுதான் இழப்பு. வேறு எந்த இழப்பும் கிடையாது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகில் உள்ள ஆகிலாபுரத்தில், பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
''அதிமுக கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறுவது உறுதி. மது குடிப்பவர்கள் உடனே குடிப்பதை நிறுத்தினால், நரம்புத்தளர்ச்சி ஏற்படும். இதனால் அவர்களின் உயிருக்கே ஆபத்து ஏற்படும். மது குடிப்பவர்களின் உயிரைப் பாதுகாப்பதற்காகத்தான், நாங்கள் உடனடியாக முழு மதுவிலக்கையும் கொண்டுவராமல் இருக்கிறோம். படிப்படியாக, மதுவிலக்கைக் கொண்டு வருகிறோம்.
ராஜகண்ணப்பன் வேறு ஒரு கட்சிக்கு ஆதரவு என்று போய்விட்டதால், அதிமுகவுக்கு எந்த இழப்பும் இல்லை. ஒரேயொரு ஓட்டுதான் இழப்பு. வேறு எந்த இழப்பும் கிடையாது''.
இவ்வாறு ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
"ஜெயலலிதா அம்மாவைச் சுமப்பதில் பெருமை": 'நகை' கற்பகம்