ஆசிரியர்களுக்கு பணி மேம்பாடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 2 முதல் 5-ம் தேதி வரை 4 நாட்கள் தொடர் மறியல் போராட்டம் நடத்தப்படும் என பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பி.எஸ்.சந்திரசேகர், பொதுச்செயலாளர் எம்.ரவிச்சந்திரன், பொருளாளர் ஜே.காந்திராஜன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: ஆசிரியர் பணியில் 2006-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதிக்குப்பின் சேர்ந்துள்ள 6 ஆயிரம் பேருக்கு, அவர்கள் பணியில் சேர்ந்து 4 ஆண்டுகள் நிறைவு செய்தது முதலே பணி மேம்பாடு வழங்கப்பட வேண்டும். அவ்வாறு வழங்கப்படாததால், அவர்களுக்கு கிடைக்க வேண்டிய ஊதிய உயர்வு மறுக்கப்பட்டுள் ளது. திருச்சி தேசிய கல்லூரி தத்துவ வியல் துறையை மூடக்கூடாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதுதொடர்பான போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது ஊதிய வெட்டு, பணி மேம்பாடு மறுப்பு, ஆண்டு ஊதிய உயர்வு மறுப்பு போன்ற பழி வாங்கும் நடவடிக்கைகளில் கல்லூரி ஈடுபட்டு வருகிறது.
பழி வாங்கும் நடவடிக்கைகளை ரத்து செய்து பிறப்பித்த அரசாணைகளை அமல்படுத்த கல்லூரி நிர்வாகம் மறுத்து வருகிறது.
உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து 5 ஆண்டுகள் ஆகியும் ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியை, அரசு கல்லூரி என அறிவித்து ஆணையிடவில்லை. அரசு கல்லூரியாக அறிவித்தால், கல்லூரி வளர்ச்சி பெறும். ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறுவார்கள்.
இவை உட்பட 5 கோரிக்கை கள் குறித்து உயர்கல்வித் துறைக்கு பல்வேறு கடிதங்கள் எழுதி யுள்ளோம். பல போராட்டங்களும் நடத்தி இருக்கிறோம். ஆனால் இதுவரை கோரிக்கைகள் நிறை வேற்றப்படவில்லை. இந்நிலை யில், கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 2, 3, 4 மற்றும் 5-ம் தேதிகளில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு தொடர் மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.