குஜராத் மாநிலத்தில் இருந்து குட்கா, பான்மசாலா போன்ற போதைப் பொருட்கள் கடத்தி வரப்படுவதாக பூவிருந்தவல்லி காவல் துறையினருக்கு தகவல் கிடைத்ததுள்ளது. இதையடுத்து காவல் ஆய்வாளர் அலமேலு தலை மையிலான போலீஸார், பெங்க ளூரு தேசிய நெடுஞ்சாலையில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட் டனர். அப்போது ஒரு இடத்தில் குஜ ராத் வாகன பதிவெண் கொண்ட 2 லாரிகளில் இருந்து மற்றொரு சரக்கு வாகனத்துக்கு மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருப்பதை போலீ ஸார் பார்த்தனர்.
இதையடுத்து லாரிகளில் இருந்த மூட்டைகளை போலீஸார் சோதனை செய்தபோது, குட்கா, பான்மசாலா இருப்பதை கண்டு பிடித்தனர். பின்னர் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் கள் ஜோதிந்ராதேவ், மிஷான்பா வஷெதன் ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும் 2 லாரிகளையும் ஒரு மினி லாரியையும் பறிமுதல் செய்தனர். 3 வாகனங்களிலும் சேர்த்து மொத்தம் 5 டன் எடையுள்ள குட்கா, பான்மசாலா போன்றவை இருந்தன. அவற்றையும் போலீ ஸார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ.20 லட்சம் ஆகும்.