தமிழகத்தில் அனைத்து மாவட்டங் களிலும் அரசுப் பள்ளியில் பயி லும் ஏழை மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்துவதற்கான ‘மண்வாசனை’ என்ற தமிழ்நாடு அறக்கட்டளையின் சிறப்புத் திட் டத்தை தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் தொடங்கிவைத் தார்.
தமிழ்நாடு அறக்கட்டளையின் ஆண்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோ ஹித் கலந்துகொண்டு தமிழ்நாடு அறக்கட்டளையின் ‘மண்வாசனை’ (மாவட்ட மூலதன நிதித்திட்டம்) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
1974-ல் அமெரிக்கத் தமிழர் களால் தமிழ்நாடு அறக்கட்டளை தொடங்கப்பட்டது. கடந்த 40 ஆண்டுகளில் இந்த அறக்கட்டளை யின் 600 திட்டங்களால் 2 லட்சத் துக்கும் மேற்பட்டோரின் வாழ்க்கை மேம்பட்டுள்ளது. தமிழக அரசு ஆதரவுடன் 9 மாவட்டங்களில் 51 அரசு பள்ளிகளைத் தத்தெடுத்து கல்வியில் பின்தங்கியுள்ள 5,000 குழந்தைகளின் கல்வித் தரத்தை மேம்படுத்தியுள்ளது.
இன்று தொடங்கியுள்ள ‘மண் வாசனை’ என்ற புதிய திட்டம், தமிழகத்தில் உள்ள 33 மாவட்டங் களிலும் தலா ரூ.1 கோடியே 75 லட்சம் மூலதனத்துடன் அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர் களின் கல்வித் திறனை மேம் பாட்டுக்காக செயல்படுத்தப்பட வுள்ளது பாராட்டுக்குரியது.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குகிறது. வெளிநாடுவாழ் இந்தியர்களிடம் அரசியல் கட்சி கள் நன்கொடை கேட்பார்கள். மேற்கண்ட திட்டத்துக்காக பணம் வழங்க வேண்டியிருப்பதால், நன் கொடை வழங்க இயலாது என்று கூறுங்கள். ஏனென்றால் உங் களைப் போன்றவர்கள் கொடுக்கும் நன்கொடை தேர்தலின்போது வாக் காளர்களுக்கு கொடுக்கப்படும். எனவே, அரசியல்வாதிகளுக்கு நன் கொடை கொடுப்பதற்கு பதிலாக சமூக நலத் திட்டங்களுக்கு செல விடுங்கள். இவ்வாறு ஆளுநர் பேசினார்.
சென்னை மியூசிக் அகாடமி தலைவர் ‘இந்து’ என்.முரளி பேசும் போது, “நம் நாட்டில் ஏராளமானோர் கல்வி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கி இருப்பதால், மனித நேயமும், தாமாக முன்வந்து சேவை செய்வதும் தற்போது தேவைப்படு கிறது. நிர்வாகம், வெளிப்படைத் தன்மை, நேர்மை ஆகியவற்றின் மூலம் தமிழ்நாடு அறக்கட்டளை நாட்டில் உள்ள மற்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு முன் உதாரணமாகத் திகழ்கிறது. தமிழ் நாடு அறக்கட்டளை போன்ற சேவை அமைப்புகள் பிற மாநிலங்களிலும் உருவாக வேண்டும்” என்றார்.
தமிழ்நாடு அறக்கட்டளை நிறு வனத் தலைவர் பழனி ஜி.பெரிய சாமி பேசும்போது, “அமெரிக்கா வில் எனது வீட்டில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது தாய் நாட்டுக்கு நம்மால் ஆனதைச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் தமிழ்நாடு அறக்கட்டளையை உரு வாக்கினோம். இப்போது ஆயிரத் துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். 9,000 நன்கொடையாளர் கள் இருக்கின்றனர்” என்றார்.
முன்னதாக, தமிழ்நாடு அறக் கட்டளைத் தலைவர் எஸ்.ராஜரத் தினம் வரவேற்றார். அறக்கட்டளை அறங்காவலர் வி.நாகப்பன் நன்றி கூறினார். தமிழ்நாடு அறக்கட்டளை அமெரிக்க பிரிவுத் தலைவர் சோமலை சோமசுந்தரம் உள் ளிட்டோர் கலந்துகொண்டனர்.