சென்னையில் பல்வேறு இடங்களில் இருந்து தி.நகர், புரசைவாக்கம் உள்ளிட்ட இடங்களுக்கு தீபாவளி ஷாப்பிங் செல்ல போக்குவரத்து கழகம் சார்பில் விரைவில் 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன.
மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் தீபாவளி, பொங்கல் பண்டிகை காலங்களில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம்.
அக்டோபர் மாதம் 23-ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜவுளி மற்றும் பொருட்கள் வாங்க சென்னையின் முக்கிய பகுதிகளான தி.நகர், புரசைவாக்கம் பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகரிக்கும். திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இருந்தும் மக்கள் வருவார்கள்.
அதனால், மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் தீபாவளி, பொங்கல் பண்டிகை காலங்களில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன.