தமிழகம்

மு.க.ஸ்டாலினுடன் அன்புமணி திடீர் சந்திப்பு

செய்திப்பிரிவு

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் பாமக இளைஞரணி தலைவரும், எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ் நேற்று சந்தித்தார். அன்புமணியுடன் அவரது மனைவி சவுமியாவும் வந்திருந்தார்.

இருவரும் தங்கள் மகள் திருமண விழா அழைப்பிதழை ஸ்டாலினிடம் கொடுத்து, விழாவுக்கு குடும்பத்துடன் வருமாறு அழைப்பு விடுத்தனர். இந்த சந்திப்பின்போது, ஸ்டாலினின் மனைவி துர்கா, பாமக தலைவர் ஜி.கே.மணி, மத்திய முன்னாள் அமைச்சர் ஏ.கே.மூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT