தமிழகம்

தமிழ் பேரரசு கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கினார் இயக்குநர் கவுதமன்

செய்திப்பிரிவு

தமிழ்ப் பேரரசுக் கட்சி என்ற புதிய கட்சியை தமிழ்த் திரைப்பட இயக்குநர் கவுதமன் தொடங்கியுள்ளார்.  சென்னை விருகம்பாக்கத்தில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது.

இது தொடர்பாக கவுதமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக மக்களின் கலை, கலாச்சாரம், இயற்கை வளம், மொழி போன்ற உரிமைகள் மற்றும் அரசியல் உரிமைகளுக்காக போராடி வருகிறோம்.  உரிமைகளை மீட்டெடுக்க அரசியல் எனும் ஆயுதத்தை கையில் எடுப்பதாகவும் தூய்மையான செயல்பாட்டால் தமிழக மக்களி பேராதரவை பெறுவோம் என்று இயக்குநர் கவுதமன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தங்கள் கட்சியின் நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்போம் என்றும் இனம், மொழி, வளம் காக்க அரசியல் சக்தியாக உருவெடுக்கிறோம் என்றும்  கூறினார்.

“நாங்கள் நின்ற போராட்டங்களின் தொடர்ச்சியாக அதே அற வழியில் அறிவுபூர்வமாக, சட்டபூர்வமாகச் செயல்படுவோம். இது மாணவர்கள், இளைஞர்களுக்கான கட்சி.  புதிய சரித்திரத்தைப் படைக்க வேண்டும் என்று முடிவு செய்து இன்றைக்குத் தொடங்கியிருக்கிறோம்.” என்றார் கவுதமன்.

SCROLL FOR NEXT