தமிழகம்

புல்வாமா தாக்குதலில் வீரமரணம் எய்திய அரியலூர் வீரர் குடும்பத்துக்கு ஸ்டாலின் நேரில் சென்று இரங்கல்

செய்திப்பிரிவு

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடத்தப்பட்ட நாட்டை உலுக்கிய தற்கொலைத் தாக்குதலில் வீரமரணம் அடைந்த 40 வீரர்களில் ஒருவர் அரியலூ மாவட்டத்தைச் சேர்ந்த சிவச்சந்திரன். இவரது இல்லத்துக்கு சென்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவிததார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இந்திய இராணுவ வீரர்கள் மீது நிகழ்த்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் உயிர் நீத்தவர்களில் ஒருவரான, அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தா.பழூர் கார்குடி கிராமத்தைச் சார்ந்த சிவச்சந்திரன் இல்லத்துக்கு, இன்று (24-02-2019) திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின்  நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

அப்போது, கழகத்தின் சார்பில் ரூ 2 இலட்சம் நிதியுதவியை சிவச்சந்திரன் அவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கினார்.

SCROLL FOR NEXT