தமிழகம்

சென்னையில் ஜில்லுன்னு மழை

வி. ராம்ஜி

சென்னையில் இன்று 28ம் தேதி காலையில் ஜில்லுன்னு மழை பெய்தது.  மேலும் ‘எப்போ வேணாலும் வருவேன்’ என்பது போல் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது வானம். 

இரண்டு நாட்களுக்கு மழை இருக்கும் என்று கடந்த வாரத்திலேயே வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ஆனால் கடந்த வாரம் மழையே இல்லை. மழைக்கான அறிகுறியும் தென்படவில்லை.

இன்று 28ம் தேதி வியாழக்கிழமை, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதைப்போலவே, இன்றைய விடியல் பொழுது இருந்தது.

ஆனால், காலை 6.30 மணிக்கெல்லாம் லேசாக தூறல் மழை விழத்தொடங்கியது. சென்னையில் மீனம்பாக்கம், கிண்டி, சைதாபேட்டை, அடையார், ராஜா அண்ணாமலைபுரம், திருவல்லிக்கேணி என்பது உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்தது.

மேலும் சென்னை புறநகர் பகுதிகளான பெருங்களத்தூர், மறைமலைநகர், அம்பத்தூர், அயப்பாக்கம் முதலான பல பகுதிகளிலும் நின்று, நிதானித்து பெய்த மழையால், சென்னை மக்கள் ‘அப்பாடா’ என்று நிம்மதிப்பெருமூச்சு விட்டனர்.

கோடை வருவதற்கு முன்பே வந்த இந்த மழை, சென்னை மக்களுக்கு சற்று ஆறுதல்தான். ஆனாலும் ஒருநாலு நாள் மழை பெஞ்சாத்தான், இந்தக் கோடையில் குடிநீர் பிரச்சினையை சமாளிக்க முடியும் என்று புலம்புகின்றனர் சென்னை மக்கள்.

SCROLL FOR NEXT