சென்னை பல்கலைக்கழக பதிவாளர் பா.டேவிட் ஜவகர், வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை பல்கலைக்கழகத்தில் 68 துறைகள் இயங்கி வருகின்றன. இதில், எம்.பில்., முதுகலை பட்டப் படிப்பு, பட்டயப் படிப்பு மற்றும் சான்றிதழ் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்ப படிவங்கள் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் வழங்கப்படுகின்றன. விண்ணப்பக் கட்ட ணம் ரூ.300 ஆகும். விண்ணப்பங் களை பல்கலைக்கழகத்தின் இணை யதளத்தில் (www.unom.ac.in) இருந்து பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம்.
பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படிப்பில் 45 இடங்களும், இதே படிப்பில் சுயநிதிப்பிரிவில் 50 இடங் களும், எம்.சி.ஏ. படிப்பில் 30 இடங் களும் உள்ளன. “டான்செட்” நுழைவுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தொழில் நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் ஒற்றைச்சாளரமுறை (சிங்கிள் விண்டோ சிஸ்டம்) கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.