தமிழகம்

பராமரிப்புப் பணிகளுக்காக மின்சார ரயில் சேவை மாற்றம்

செய்திப்பிரிவு

பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்றும், நாளையும் பித்ரகுண்டா- சென்னை சென்ட்ரல் பயணிகள் ரயில், சென்னையில் இருந்து சூலூர் பேட்டை, கும்மிடிப் பூண்டி செல்லும் மின்சார ரயில்கள் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது: கும்மிடிப்பூண்டியில் பராமரிப்புப் பணிகள் நடப்பதால் இன்றும், நாளையும் (செப். 20, 21) ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.

பித்ரகுண்டா சென்னை சென்ட்ரல் பயணிகள் ரயில் எலாவூரில் இரண்டரை மணி நேரம் நிறுத்தி வைக்கப்படும். சென்ட்ரலில் இருந்து காலை 8.30 மணிக்கு புறப்படும் சென்ட்ரல் சூலூர்பேட்டை மின்சார ரயில், சூலூர்பேட்டையில் இருந்து காலை 9.50 மணிக்குப் புறப்படும் சூலூர்பேட்டை சென்ட்ரல் மின்சார ரயில், பொன்னேரி சூலூர்பேட்டை இடையே ரத்து செய்யப்படுகிறது.

சென்ட்ரலில் இருந்து காலை 8.05, 8.50, 9.22 மணிக்குப் புறப்படும் சென்ட்ரல் கும்மிடிப்பூண்டி மின்சார ரயில்கள், பொன்னேரி கும்மிடிப்பூண்டி இடையே ரத்து செய்யப்படுகிறது.

அதுபோல, கும்மிடிப் பூண்டியில் இருந்து காலை 9.30, 10.50, 11.20 மணிக்குப் புறப்படும் மின்சார ரயில்கள், பொன்னேரி கும்மிடிப்பூண்டி இடையே ரத்து செய்யப்படுகிறது.

SCROLL FOR NEXT