கோவையில் பீளமேடு வழியாக கடந்த 7-ம் தேதி இருசக்கர வாகனத் தில் சென்ற விமான பார்சல் சர்வீஸ் நிறுவனத்தின் ஊழியரான ராஜஸ்தானைச் சேர்ந்த பிரித்வி சிங் (28) என்பவரை 3 பேர் வழி மறித்து தாக்கிவிட்டு, 5.7 கிலோ தங்க நகை, 1,425 கிராம் வெள்ளி நகை, 122.88 காரட் வைர நகை கள் ஆகியவற்றை கொள்ளைய டித்துச் சென்றனர். கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.97.76 லட்சம் ஆகும்.
இதுதொடர்பாக பீளமேடு குற்றப்பிரிவு போலீஸார் நடத்திய விசாரணையில், கொள்ளையில் ஈடுபட்டவர்கள், அதே பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்த கோவை சீர நாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த பிரவீணா (35), அவரது கணவர் தினகரன் (37) இவர்களது கூட்டாளி களான நரசீபுரத்தைச் சேர்ந்த வெங் கடேஷ் (33), தொண்டாமுத்தூர் கார்த்திக் (35), குளத்துப்பாளை யம் ஷெல்டன் (27), மோகன்ராஜ் என தெரியந்தது.
இவ்வழக்கில் பிரவீணா, தினக ரன், வெங்கடேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 2 கிலோ நகைகள் பறி முதல் செய்யப்பட்டன. மேலும், விசாரணையில் தொண்டாமுத்தூர் அருகே சுடுகாட்டில் ஒரு கிலோ நகைகளை புதைத்து வைத்தி ருந்தது தெரிந்தது. இதைய டுத்து புதைத்து வைக்கப்பட்டு இருந்த ஒரு கிலோ நகைகளை போலீஸார் கைப்பற்றினர்.