தமிழகம்

புதிய ரோந்து கப்பல் ஐசிஜிஎஸ் அபிராஜ் நாட்டுக்கு அர்ப்பணிப்பு: கடற்படை தென் பிராந்திய தளபதி தகவல்

செய்திப்பிரிவு

தூத்துக்குடியில் இந்திய கடலோர காவல் படையின் புதிய ரோந்து கப்பல் ஐசிஜிஎஸ் அபிராஜ் சேவையை, செவ்வாய்க்கிழமை இந்திய கடற்படையின் தென் பிராந்திய தளபதி வைஸ் அட்மிரல் சுரேந்தர் பால் சிங் சீமா நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

எஸ்.பி.எஸ். சீமா செய்தி யாளர்களிடம் இதுகுறித்து கூறியதாவது:

கடல் கொள்ளையர்களிடம் இருந்து இந்திய சரக்கு கப்பல்களை பாதுகாக்க கடற்படை தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கு தேவையான கப்பல்கள் நம்மிடம் உள்ளன. கடல் கொள்ளையர்கள் அதிகம் உள்ள ஏதென்ஸ் வளைகுடா பகுதியில் இந்திய கடற்படை கப்பல் ஒன்று எப்போதும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்திய கடற்படை கப்பல் அந்தப் பகுதிக்கு சென்றதில் இருந்து இந்திய சரக்கு கப்பல் எதையும் கடல் கொள்ளையர்கள் கடத்தவில்லை. தமிழக மீனவர்களை பாதுகாக்க இந்திய கடற்படையும், கடலோர காவல் படையும் ஒருபோதும் தவறியதில்லை. இது தொடர்பான புகார்களில் உண்மை இல்லை. தமிழக மீனவர்களை பாதுகாப்பது எங்களது முக்கிய பணி. அதனை சிறப்பாக செய்து வருகிறோம்’’ என்றார் அவர்.

          
SCROLL FOR NEXT