புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த சிஆர்பிஎப் வீரர்களில் 8 பேரின் குடும்பங்களுக்கு ராம்கோ சிமென்ட்ஸ் நிறுவனம் தலா ரூ.5 லட்சம் வழங்குவதாக அறிவித் துள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல் வாமா பகுதியில் கடந்த 14-ம் தேதி தீவிரவாதிகளின் தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 44 பேர் வீர மரணம் அடைந்துள்ளனர். இதனால் அவர்களின் குடும்பத்தினர் தீராத சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
அந்த வீரர்களுக்கு மரியாதை செய்யும் வகையிலும், இந்த இக் கட்டான நேரத்தில் அவர்களின் குடும்பத்தினருக்கு உதவும் வகையிலும் ராம்கோ சிமென்ட்ஸ் நிறுவனம் நிதி உதவியை வழங்கு கிறது. அதன்படி தமிழகத்தை சேர்ந்த சிவசந்திரன், சுப்பிரமணி யன், கேரளத்தைச் சேர்ந்த விவி.வசந்த குமார், கர்நாடகத்தைச் சேர்ந்த ஹெச்.குரு, மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பப்லு சான்ட்ரா, சுதிப் பிஸ்வாஸ், ஒடிசாவை சேர்ந்த பி.கே.சாஹு, மனோஜ் குமார் பெஹரா ஆகிய 8 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.40 லட்சம் வழங்கப்படும்.
மேலும் பாதிக்கப்பட்ட அந்த குடும்பத்தினரின் மறுவாழ்வுக்கு தேவையான உதவிகளை ராம்கோ சிமென்ட்ஸ் நிறுவனம் செய்யும். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.