இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பணியிட தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை நிர்வாகப் பணியில் அடங்கிய உதவி ஆணையர் பதவிகளில் 4 காலி யிடங்களை நிரப்புவதற்காக கடந்த மார்ச் 8, 9-ம் தேதிகளில் ஆன் லைனில் தேர்வு நடத்தப்பட்டது.
டிஎன்பிஎஸ்சி நடத்திய இத்தேர்வை 242 பேர் எழுதினர். இந்த நிலையில், எழுத்துத் தேர்வின் முடிவு நேற்று வெளியிடப் பட்டது. அடுத்த கட்டதேர்வான நேர்முகத்தேர்வுக்கு அனுமதிப் பதற்கான சான்றிதழ் சரிபார்ப் புக்கு தேர்வுசெய்யப்பட்ட 20 விண்ணப்பதாரர்களின் பதிவெண் பட்டியல் டிஎன்பிஎஸ்சி இணைய தளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்ட அனைத்து விண்ணப்பதாரர்களும் தங்களின் ஆன்லைன் விண்ணப்பத்தில் அளித்த தகவல்களின் அடிப்படை யில் சான்றிதழ்களின் நகல்களை சரிபார்ப்புக்கு அக்டோபர் 1-ந் தேதிக்குள் பதிவஞ்சல் மற்றும் பதிவேற்றம் மூலம் அனுப்ப வேண்டும். குறிப்பிட்ட தேதிக்குள் சான்றிதழ் அனுப்பாத விண்ணப் பதாரர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். மேற்கண்ட தகவலை டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா தெரிவித்துள்ளார்.