தமிழகம்

‘உங்களுக்கே குறையா?’ - திமுக கிராம சபைக் கூட்டத்தில் சசிகலா என்ற பெண்ணிடம் உதயநிதி ஸ்டாலின் ருசிகரம்

செய்திப்பிரிவு

விரைவில் முதலமைச்சர் நாற்காலியில் ஸ்டாலின் அமர்வார் என்று திமுக தலைவரின் மகன் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை பூந்தமல்லியை அடுத்த பாலவேடு தோட்டத்தில் திமுக கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், தமிழகத்தில் மிக விரைவில் ஆட்சி மாற்றம் நடைபெறும் என்று தெரிவித்தார்.

மேலும், கூட்டத்தின் போது பெண்களின் குறைகளையும் அவர் கேட்டறிந்தார். அப்போது கூட்டத்தில் ஒரு பெண்  எழுந்து வந்து தன் பெயர் சசிகலா என்றதும் ‘உங்களுக்கெ குறையா?’ என்று உதயநிதி ஸ்டாலின் கேட்டதும் கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது.

SCROLL FOR NEXT