தமிழகம்

மேடைகளில் பாடினால் மீம்ஸ் போட ஒரு கூட்டமே காத்திருக்கிறது: அமைச்சர் ஜெயக்குமார் ருசிகரம்

செய்திப்பிரிவு

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 71வது பிறந்தநாள் நிகழ்ச்சிகளை முன்னிட்டு ராயபுரத்தில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது மேடைகளில் பாடினால் மீம்ஸ் போட ஒரு கூட்டமே காத்திருக்கிறது என்று கலகலப்பாக குறிப்பிட்டுள்ளார்.

அந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, மேடைகளில் பாடினார்ல் மீம்ஸ் போடுவதற்காகவே ஒரு கூட்டம் காத்திருக்கிறது தான் பாடினால் ரெடியாக மீம்ஸ் இருப்பதாகவும் அவர் நகைச்சுவையுடன் குறிப்பிட்டார். ஏற்கெனவே பாடியதை 15 லட்சம் பேர் பார்த்து என்னை பெருமை படுத்தியிருக்கிறார்கள்.  நான் தொழில்பூர்வ பாடகரெல்லாம் கிடையாது, ஆனால் 5 லட்சம் பேர் முன்னால பாடணும்னா ஒரு தில் வேண்டும்.

ஆனால் இப்ப பாடினால் மீம்ஸுக்குனே ஒரு கும்பல் இருக்கு, நம்மை அவர்கள் சும்மா விடமாட்டார்கள் என்றார்.

SCROLL FOR NEXT