திண்டிவனம் அருகே இன்று காலை நடந்த சாலை விபத்தில் அதிமுகவைச் சேர்ந்தவரும், விழுப்புரம் தொகுதி மக்களவை எம்.பி.யுமான எஸ். ராஜேந்திரன் உயிரிழந்தார். அவருக்கு வயது 62
இது குறித்து போலீஸார் தரப்பில் கூறப்படுவதாவது:
திண்டிவனத்தில் உள்ள சர்கியூட் ஹவுஸில் எம்.பி. ராஜேந்திரன் தங்கி இருந்தார். இன்று காலை தனது காரில் சென்னை புறப்பட்டு சென்றார். அப்போது சர்கியூட் ஹவுசிலில் இருந்து சென்னை நோக்கிச் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் காரை ஓட்டி வந்த டிரைவர் அன்புசெல்வன் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எம்.பி. ராஜேந்திரன் படுகாயங்களுடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ராஜேந்திரன் எம்பி மரணம் அடைந்த செய்தி கேட்டு அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த 2014ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் விழுப்புரம் (தனிதொகுதி) தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ராஜேந்திரன் திமுக வேட்பாளரை விட சுமார் 2 லட்சம் ஓட்டு அதிகம் பெற்று எம்பி ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.