ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சுகாதாரத்துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன் போக்குவரத்துத் துறைக்கு மாற்றபட்டுள்ளார்.
ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் குறித்த விவரம்:
சுகாதாரத்துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன் போக்குவரத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் நகராட்சி நிர்வாக ஆணையராக நியமனம்
பதிவுத் துறை ஐஜி குமரகுருபரன் பேரிடர் மேலாண்மை ஆணையராக நியமனம்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் ராஜாமணி கோயமுத்தூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்
கோவை வணிக வரித்துறை இணை ஆணையர் சிவராசு திருச்சி மாவட்ட ஆட்சியராக நியமனம்.
கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சிறப்பு செயலாளராக நியமனம்.
கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் விஜய கார்த்திகேயன், தமிழ்நாடு நகர்ப்புற ஆய்வு மையத்தின் கோவை இயக்குனராக நியமனம்.
சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் நகராட்சி நிர்வாக துறை ஆணையராக நியமனம்.
தமிழ்நாடு சுகாதார பணிகள் திட்ட இயக்குனர் உமாமகேஸ்வரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக நியமனம்
தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரிய நிர்வாக இயக்குனர் ஆனந்த் திருவாரூர் மாவட்ட ஆட்சியராக நியமனம்
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஆணையர் பீலா ராஜேஷ் சுகாதாரத் துறை செயலாளராக நியமனம்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கணேஷ் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குநராக நியமனம்
பொள்ளாச்சி உதவி ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் கோவை வணிக வரித்துறை இணை ஆணையராக நியமனம்
வணிகவரி மற்றும் பதிவுத் துறை முதன்மைச் செயலாளர் பாலச்சந்திரன் பதிவுத்துறை ஐஜி பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என அறிவிப்பு
திருப்பூர் துணை ஆட்சியர் ஸ்ரவன் குமார் ஜடாவத் கோவை மாநகராட்சி ஆணையராக நியமனம்
நகராட்சி நிர்வாக ஆணையர் பிரகாஷ் சென்னை மாநகராட்சி ஆணையராக நியமனம்.
மதுரை மாநகராட்சி ஆணையர் அனீஸ்சேகர், தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் செயல் இயக்குநராக நியமனம்
தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் செயல் இயக்குனர் விசாகன், மதுரை மாநகராட்சி ஆணையராக நியமனம்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் நிர்மல் ராஜ் தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தின் இணை இயக்குநராக நியமனம்
தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ஜான் வர்கீஸ் சென்னை மாநகராட்சி மண்டல துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்
தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக ஜெயசீலன் நியமிக்கப்பட்டுள்ளார்.