தமிழகம்

பாகிஸ்தான் தீவிரவாதிகளை வேரோடு அழிக்கவேண்டும்: புல்வாமா தாக்குதலில் கொல்லப்பட்ட வீரர் சிவச்சந்திரனின் மனைவி ஆவேசம்

செய்திப்பிரிவு

பாகிஸ்தான் பயங்கரவாதிகளை வேரோடு அழியுங்கள் என புல்வாமா தாக்குதலில் மரணமடைந்த சிஆர்பிஎப் வீரர் சிவச்சந்திரனின் மனைவி  கலாவதி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா போர் விமானங்கள்  இன்று அதிகாலை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்களை அழித்தனர். 

12 விமானங்கள் 1000 கிலோ வெடிமருந்தை வீசி தாக்குதல் நடத்தி விட்டு பாக் விமானங்களை சமாளித்து மீண்டும் இந்தியா திரும்பியது. இதில் 300 தீவிரவாதிகள் அழிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த தாக்குதலை அனைத்துக்கட்சிகளும் பாராட்டுகின்றன. இன்றைய தாக்குதலுக்கு முக்கிய காரணியாக இருப்பது கடந்த 15-ம் தேதி நடந்த புல்வாமா தாக்குதல்.

புல்வாமா தாக்குதலில் கொல்லப்பட்ட 40-க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்களில் 2 பேர் தமிழகத்தை சேர்ந்த வீரர்கள். இவர்களில் ஒருவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சுப்பிரமணி, மற்றொருவர் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த சிவசந்திரன்.

இருவரும் இளம் வயதினர், இருவருக்கும் இளம் மனைவிகள் உள்ள நிலையில் கொல்லப்பட்டது தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியது. சிவச்சந்திரன் குடும்பத்தில் கடைசி ஆண் வாரிசாக இருந்த அவரும் கொல்லப்பட்டதும், 3 மாத கர்ப்பிணி மனைவியான கலாவதியை கடுமையாக பாதித்தது.

இந்நிலையில் இன்று பயங்கரவாதிகளின் மீதான விமான படை தாக்குதலை இந்தியா கையாண்டது. 300-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனை கலாவதி பாராட்டியுள்ளார். சிவச்சந்திரன் மனைவி "தீவிரவாதிகளை வேரோடு அழியுங்கள், இது தொடரவேண்டும்,"  என தனது கணவரின் மரணத்திற்கு பதிலடி தெரிவிக்கும் விதமாக சிவசுப்ரமணியனின் மனைவி கலாவதி கருத்து தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT