தமிழகம்

தமிழகத்தில் எழுதுவோர் குறைவு

செய்திப்பிரிவு

கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமியின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் பேராசிரியர் சத்ய பூமிநாதன் பேசியது:

சிவில் சர்வீஸ் தேர்வு என்பது மிகைப்படுத்தப்பட்ட பத்தாம், பன்னிரெண்டாம் வகுப்புகளின் தேர்வு என்றால் மிகையாகாது. அதில் படிக்கப்பட்ட பாடங்களே விரிவாக கேட்கப்படுகின்றன.

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட 24 பணிகளுக்கு இத்தேர்வு நடக்கிறது. தேர்வை எழுத பட்டப்படிப்பு போதுமானது. 21 வயது முதல் இத்தேர்வை எழுதலாம். 1970 களில் தமிழகத்திலிருந்து இத்தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்கள் அதிக அளவில் இருந்தார்கள். இப்போது தமிழகத்தில் இருந்து எழுதுவோரின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. அடிப்படைத் தேர்வு, முக்கியத் தேர்வில் வெற்றி பெற்று நேர்முகத் தேர்வில் பங்கேற்போர் எண்ணிக்கையும் சரிந்துள்ளது என்றார்.

SCROLL FOR NEXT