தமிழகம்

அதிமுகவை கைப்பற்றி ஊழல் இல்லாத ஆட்சி அமைப்போம்: தங்க. தமிழ்ச்செல்வன் கருத்து

செய்திப்பிரிவு

அதிமுகவை கைப்பற்றி ஊழல் இல்லாத ஆட்சியை அமைப்போம் என்று அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க. தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலில் அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க. தமிழ்ச்செல்வன் நேற்று தரிசனம் செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறும்போது, ‘‘நான் திமுகவில் சேருவதாக வரும் தகவல் முற்றிலும் தவறானது. திமுகவில் இருந்து எம்ஜிஆர் பிரிந்து வந்தது முதல் எங்கள் குடும்பத்தினர் அதிமுகவில் தான் உள்ளனர். தம்பிதுரை திமுக பொதுக்குழு உறுப்பினராக இருந்தபோது நடந்த கூட்டத்தில், நடிகர் பக்கம் யாரும் போக வேண்டாம் என்றார்.

ஆனால், எங்கள் குடும்பம் திமுகவில் இருந்து வெளியேறி அதிமுகவில் இணைந்தது. அதிமுகவில் எனது தந்தை நான்கு முறை ஒன்றியச் செயலாளர் பதவியில் இருந்துள்ளார். எனக்கு எப்போதும் அதிமுக, இரட்டை இலைதான்.

நான் தற்காலிகமாகத்தான் அமமுகவில் இருக்கிறேன். சசிகலா, டிடிவி தினகரன் தலைமையில் அதிமுகவை கைப்பற்றி ஊழல் இல்லாத ஆட்சியை அமைப்போம். நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியிட்டு மனுதாக்கல் செய்யும் கடைசி நாள் வரை கூட்டணி பற்றி பேச அனைவருக்கும் உரிமை இருக்கிறது. நாங்கள் யார் பக்கம் போகிறோம் என்று கடைசி நாளில் முடிவு செய்யப்படும்.

ஸ்டாலின் ஊராட்சி சபை கூட்டம் நடத்துவது குறித்து தவறு சொல்ல முடியாது. அந்த கூட்டங்களை நாங்களும் பார்க்கிறோம். அதில் கட்சியினர்தான் அதிகம் இருக்கின்றனர். அது செயற்கைத் தனமாக தெரிகிறது. பொதுமக்கள் அதிகம் பங்கேற்றால் நன்றாக இருக்கும்.

ராஜினாமா செய்ய வேண்டும்

ஜாக்டோ-ஜியோ கூட்ட மைப்பினரை முதலமைச்சர் அழைத்துப் பேச வேண்டும். அவர்களின் 9 கோரிக்கைகளில் இரண்டையாவது நிறைவேற்ற லாம். எல்லாவற்றையும் பேசி முடிக்கக்கூடியது தான்.

கொடநாடு விவகாரத்தில் முதலமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்திருக்க வேண் டும். சசிகலா ஆதரவால் தான் முதலமைச்சர் ஆனார். அவர் நேரடியாக முதலமைச்சர் ஆக வில்லை என்பதை நினைத்துக் கொள்ள வேண்டும்.

பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமனமே தவறான நடவடிக்கை. போராட் டத்தில் ஈடுபடுபவர்களை அரசியல் கட்சியினர் தூண்டுவதாக கூறுவது தவறானது.

இனிமேல் ஆட்சிக்கு வருப வர்கள் ஊழலை குறைத்து ஊழல் செய்பவர்களை தண்டித்தால் மட்டுமே ஊழலை குறைக்க முடியும்’’ என்றார்.

SCROLL FOR NEXT