தமிழகம்

களைகட்டுகிறது திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல்; திமுக, அமமுக வேட்பாளர்கள் அறிவிப்பு: அதிமுக சார்பில் போட்டியிடப் போவது யார் என இன்று தெரிய வாய்ப்பு

செய்திப்பிரிவு

திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக் கான திமுக, அமமுக வேட் பாளர்கள் அறிவிக்கப்பட் டுள்ள நிலையில் அதிமுக வேட்பாளர் இன்று அறிவிக்கப் படலாம் என கூறப்படுகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 23 நாட்களே உள்ள நிலையில் திருவாரூர் இடைத்தேர்தல் களைகட்டி வருகிறது.

28-ம் தேதி வாக்குப் பதிவு

திருவாரூர் சட்டப்பேர வைத் தொகுதி இடைத்தேர்தல் வரும் 28-ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணை யம் அறிவித்தது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கிய நிலை யில், நேற்று வரை சேலம் மாவட்டம் மேட்டூர் பத்ம ராஜன், தருமபுரி மாவட்டம் பெண்ணாகரம் அக்னி ஸ்ரீராமச்சந்திரன், கோவை யைச் சேர்ந்த நூர்முகமது என 3 பேர் சுயேச்சை வேட்பாளர்களாக மனுத்தாக் கல் செய்துள்ளனர். இந் நிலையில் திமுக, அமமுக வேட்பாளர்களின் பெயர் கள் நேற்று அறிவிக்கப் பட்டுள்ளன.

பூண்டி கே.கலைவாணன்

இந்நிலையில் திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில், தோழ மைக் கட்சிகளின் ஆதரவுடன் திமுக வேட்பாளராக பூண்டி கே.கலைவாணன்(54) போட்டி யிடுகிறார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று அறி வித்தார். கட்சியின் திருவாரூர் மாவட்டச் செயலாளரான பூண்டி கே.கலைவாணன், திருவாரூர் மாவட்டம் கொர டாச்சேரியைச் சேர்ந்தவர். இவரது தந்தை மறைந்த ஆர்.கிருஷ்ணசாமி 25 ஆண்டு காலம் திமுகவின் கொர டாச்சேரி பேரூராட்சி செய லாளராக பதவி வகித் தவர்.

இவரது அண்ணன் கலைச் செல்வன், கடந்த 2007-ல் திமுகவின் மாவட்டச் செய லாளராக இருந்தபோது படுகொலை செய்யப்பட்டார். அதன் பிறகு, பூண்டி கலைவாணனை மாவட்டச் செயலாளராக திமுக தலைமை நியமித்தது.

2011, 2016 ஆகிய ஆண்டு களில் நடைபெற்ற திருவாரூர் சட்டப்பேரவைத் தேர்தல் களில் போட்டியிட்ட திமுக தலைவர் கருணாநிதியின் வெற்றிக்கு முழு அளவில் தேர்தல் பணியாற்றியவர் கலைவாணன்.

அமமுக எஸ்.காமராஜ்

இதனிடையே அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தின் வேட்பாளராக அக்கட்சி யின் திருவாரூர் மாவட்டச் செயலாளர் எஸ்.காமராஜ் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இவர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த எடமேலையூர் கிராமத்தைச் சேர்ந்தவர். எம்காம்., பி.எட். பட்டதாரியான இவர், 1989-ல் அதிமுகவில் சேர்ந்து நீடா மங்கலம் ஒன்றிய மாண வரணித் தலைவர், ஒன்றியச் செயலாளர், மாவட்டச் செய லாளர் ஆகிய பதவிகளை வகித்தவர். இரு முறை நீடாமங் கலம் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர், ஒரு முறை ஒன் றியக் குழுத் தலைவர், மாவட்ட வேளாண் விற்பனைக் குழுத் தலைவர் ஆகிய பதவிகளை யும் வகித்துள்ளார்.

2016-ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளராக மன்னார்குடி தொகுதியில் போட்டியிட்டு, 10 ஆயிரம் வாக்குகள் வித்தி யாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். தற்போது அமமுக திருவாரூர் மாவட்டச் செய லாளராக உள்ளார்.

அதிமுக இன்று அறிவிப்பு

திருவாரூர் இடைத் தேர் தலில் திமுக, அமமுக ஆகிய கட்சிகள் வேட்பாளர் களை அறிவித்துள்ள நிலையில், ஆளும்கட்சியான அதிமுக இன்று தனது வேட்பாளரை அறிவிக்கும் எனக் கூறப் படுகிறது.

அரசியல் கட்சிகள் சார்பில் ஆங்காங்கே கட்சிக் கொடி களும் சுவர் விளம்பரங் களும் இடம்பெறத் தொடங்கி விட்டன. சுயேச்சை வேட் பாளர்களும் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளதால் தேர்தல் களம் களை கட்டத் தொடங்கி உள்ளது.

தேர்தல் நடத்தும் சூழல் உள்ளதா? அறிக்கை கேட்கிறது ஆணையம்

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இன்னும் நிவாரணப் பணிகள் முழுமை பெறவில்லை. மக்கள் இயல்புநிலைக்கு திரும்பாத நிலையில், அங்கு தேர்தல் நடந்தால் மாவட்ட நிர்வாகத்தின் கவனம் முழுவதும் தேர்தலில்தான் இருக்கும். எனவே அங்கு தேர்தல் நடத்துவதற்கான சூழல் தற்போது இல்ைல. இதனால் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி.ராஜா தேர்தல் ஆணையத்திடம் நேற்று மனு கொடுத்தார். இதே கோரிக்கைக்காக உச்ச நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில் டி.ராஜாவின் மனுவை பரிசீலித்த தேர்தல் ஆணையம், திருவாரூர் தொகுதியில் தேர்தல் நடத்த முடியுமா முடியாதா என ஆய்வு செய்து ஓரிரு நாளில் அறிக்கை அளிக்கும்படி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவுக்கு கடிதம் அனுப்பியது. இதனை அவர் மாவட்ட தேர்தல் அதிகாரியான திருவாரூர் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ளார்.

SCROLL FOR NEXT