தமிழகம்

14 இடங்களில் மின்திருட்டு கண்டுபிடிப்பு: ரூ.15.33 லட்சம் அபராதம் விதிப்பு

செய்திப்பிரிவு

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின், சென்னை அமலாக்க கோட்டத்தின் அமலாக்க அதிகாரிகள், சென்னை தெற்கு-2 மற்றும் செங்கல்பட்டு மின்பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட சிட்லபாக்கம், தாம்பரம் கிழக்கு மற்றும் மாம்பாக்கம் பகுதியில் கூட்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, 14 இடங்களில் மின்திருட்டு கண்டுபிடிக்கப் பட்டது. இதனால், ரூ.13.86 லட்சம் இழப்பீட்டுத் தொகையாக மின்நுகர்வோருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

சம்பந்தப்பட்ட மின்நுகர்வோர் குற்றத்தை ஒப்புக்கொண்டு கூடுதலாக சமரசத் தொகை ரூ.1.47 லட்சம் செலுத்தியதால் அவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் ஏதும் பதிவு செய்யப்படவில்லை. மின்திருட்டு சம்பந்தமான தகவல்களை அமலாக்கப் பிரிவு செயற்பொறி யாளரை 9445857591 என்ற மொபைல் எண்ணில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

SCROLL FOR NEXT