மாணவர் பேரவை தேர்தல் தொடர்பான பிரச்சினையில் கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாநிலக் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை மாநிலக் கல்லூரியில் கடந்த வாரம் நடந்த மாணவர் பேரவை தேர்தல் தொடர்பான தகராறில் மாணவர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
இதனை அடுத்து, கடந்த வியாழக்கிழமை மாநிலக் கல்லூரியில் மோதல்களுக்கு காரணமாக இருந்ததாக கூறி 4 மாணவர்களை போலீஸார் கைது செய்தனர். மேலும் 8 பேர் கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், போலீஸார் கைது செய்த மாணவர் தலைவர் உட்பட 4 பேரை விடுவிக்க வேண்டும், பதற்றமான சூழலில் நடவடிக்கை எடுக்கத் தவரியதாக இடம் மாற்றப்பட்ட, முதல்வர் முகமது இப்ராகிமை மீண்டும் முதவர் பதவியில் அமர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.