நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவால் ஒரு இடம்கூட பிடிக்க முடியாது என அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு கரூர் மாவட் டத்தில் நடந்த ஆர்பாட்டத்தில் முதல்வர் குறித்து விமர்சித்ததாக டிடிவி தினகரன் மீது கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னையில் உள்ள எம்.பி., எம்எல்ஏ-க்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கு, சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜெ.சாந்தி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தினகரன் தனது வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியனுடன் நீதிமன் றத்தில் ஆஜராகி வழக்கு நகல் களை கையெழுத்திட்டு பெற்றுக் கொண்டார். அதையடுத்து வழக்கு விசாரணையை பிப்.4-ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
நீதிமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் தினகரன் கூறியதாவது:
ஜாக்டோ ஜியோ போராட் டத்தில் பங்கேற்ற 95 சதவீத ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பிவிட்டனர் என கூறுவது உண்மைக்கு மாறான தகவல். இந்த அரசு எல்லா விஷயத்திலும் பொய் சொல்கிறது. ஊடகங்கள் நடுநிலை தவறாமல் செய்திகளை வெளியிட வேண்டும்.
நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவால் ஒரு இடம்கூட பிடிக்க முடியாது. ஒரு தொகுதியிலும் டெபாசிட்டும் கிடைக்காது. எங் களைப் பொறுத்தவரை 6 மாதத் துக்கு முன்பாகவே தேர்தல் வேலைகளை தொடங்கிவிட் டோம். கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகி றோம். தேசியக் கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேசவில்லை.
ஜெயலலிதாவுக்கு ‘பாரத ரத்னா’ வழங்கப்பட்டு இருக்க வேண்டும். அதற்காக இங்குள்ள ஆட்சியாளர்கள் என்ன நட வடிக்கை எடுத்தார்கள் என்பது தெரியவில்லை. மத்திய அரசு எல்லா விஷயத்திலும் அரசியல் உள்நோக்கத்துடன் செயல்படுகிறது என்றார்.