தமிழகம்

சேதமடைந்த படகுகளுக்கான நிதியுதவி ரூ.1.50 லட்சமாக உயர்வு; புயல் சீரமைப்புக்கு இதுவரை ரூ.2,300 கோடி ஒதுக்கீடு: சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

செய்திப்பிரிவு

‘கஜா’ புயலால் சேதமடைந்த படகு களுக்கு அறிவிக்கப்பட்ட ரூ. 85 ஆயிரம் நிவாரணம் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரமாக உயர்த்தப்படும், 5 ஆண்டுகளில் 3 லட்சம் வீடுகள் கட்டப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக உறுப்பினர் துரை சந்திரசேகரன், சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் முகமது அபூபக்கர், மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி ஆகியோர் கொண்டு வந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு பதிலளித்து முதல்வர் பேசியதாவது:

தமிழக அரசு மேற்கொண்ட ‘கஜா’ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் 81,948 பேர் 471 முகாம்களில் தங்க வைக்கப் பட்டனர். இதனால் உயிர்ச் சேதம் பெருமளவில் குறைக்கப்பட் டுள்ளது. கஜா புயலால் 52 பேர் உயிரிழந்தனர். 5 லட்சத்து 57 ஆயிரத்து 492 வீடுகள் சேதமடைந்தன. 2 லட்சத்து 21 ஆயிரத்து 485 கால்நடைகள், பறவைகள் உயிரிழந்தன. 1 லட்சத்து 22 ஆயிரத்து 63 ஹெக்டேர் வேளாண் தோட்டக்கலை பயிர்கள், 78 ஆயிரத்து 584 ஹெக்டேர் தென்னை மரங்கள், 8,486 ஹெக்டேர் நெற்பயிர்கள், 3 லட்சத்து 31 ஆயிரத்து 772 மின் கம்பங்கள், 1,655 மின் மாற்றிகள், 201 துணை மின் நிலையங்கள், 32 ஆயிரத்து 111 கி.மீ. நீளத்துக்கு மின் கம்பிகள், 5,662 மீன்பிடி படகுகள், 6,157 இயந்திரங்கள், 10,648 வலைகள் சேதமடைந்தன.

உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம், படுகாய மடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம், சாதாரண காயமடைந் தவர்களுக்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளன. அத்தியா வசிய நிவாரணப் பணிகளுக்காக கடந்த நவம்பர் 19-ம் தேதி ரூ.1,000 கோடி உடனடியாக விடுவிக்கப்பட்டது. முகாம்களில் தங்கியிருந்த குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி, வேட்டி, சேலை, 4 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டது. வாழ்வாதார நிவாரணமாக ரூ.5 ஆயிரம் வழங் கப்பட்டன. ரூ.233 கோடியே 59 லட்சம் செலவில் 27 பொருட் கள் அடங்கிய நிவாரணத் தொகுப்பு கள் 6 லட்சத்து 39 ஆயிரத்து 495 குடும்பங்களுக்கு வழங்கப்பட் டுள்ளன.

இறந்த பசு, எருமை மாடுக ளுக்கு தலா ரூ.30 ஆயிரம், காளை களுக்கு தலா ரூ.25 ஆயிரம், ஆடுகளுக்கு தலா ரூ.3 ஆயிரம், முழுவதும் சேதமடைந்த குடிசை களுக்கு ரூ.10 ஆயிரம், பகுதி சேதமடைந்த குடிசைகளுக்கு ரூ.4,100 அறிவிக்கப்பட்டது.

தென்னை விவசாயிகளுக்கு..

தென்னை விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.2 லட்சத்து 64 ஆயிரத்து 600, நெல், கரும்புக்கு ஹெக் டேருக்கு ரூ.13,500, முந்திரி மரங்களை வெட்டி அகற்ற மரம் ஒன்றுக்கு ரூ.500-ம், அதிகபட்சமாக ஒரு விவசாயிக்கு 800 மரங்களை அகற்ற ரூ.4 லட்சம், கட்டுமரங்களுக்கு தலா ரூ.42 ஆயிரம், விசைப்படகுகளுக்கு தலா ரூ.5 லட்சம், வலைகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

படகுகளுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ரூ. 85 ஆயிரம், ரூ. 1 லட்சத்து 50 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். புயல் பாதித்த பகுதிகளில் 99 சதவீத மின்சாரப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

மறுநடவு செய்யப்படும் தென் னையில் ஊடுபயிர்கள் பயிரிட 100 சதவீத மானியத்தில் ரூ.20 கோடியில் வாழ்வாதார தொகுப்புத் திட்டம், தென்னை மறுசாகுபடி செய்ய ரூ.81 கோடி, தோட்டக்கலை பயிர்கள் மறுசாகுபடிக்கு ரூ.149 கோடியே 7 லட்சத்தில் திட்டங்கள் செயல்படுத்தப்படும். பிரதமர் வீட்டுவசதித் திட்டத்தின்கீழ் முதலாம் ஆண்டில் 1 லட்சம் வீடுகள், அடுத்த 4 ஆண்டுகளில் தலா 50 ஆயிரம் வீதம் 2 லட்சம் வீடுகள் என 5 ஆண்டுகளில் மொத்தம் 3 லட்சம் வீடுகள் கட்டி முடிக்க நிதி ஒதுக்குமாறு பிரதமரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு, கஜா மறுகட்ட மைப்பு, மறுவாழ்வு மற்றும் புனரமைப்புத் திட்டம் என தனியாக ஒரு அலகு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தைச் செயல்படுத்த 3 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக் கப்பட்டுள்ளனர். அதில் 2 ஐஏஎஸ் அதிகாரிகள் தஞ்சை, நாகையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுவார்கள்.

அனைவருக்கும் நிவாரணம்

மத்திய அரசு பேரிடர் நிவாரண நிதியில் இருந்து முதல் கட்டமாக ரூ.353 கோடியே 70 லட்சம், 2-ம் கட்டமாக 1,146 கோடியும் வழங்கி யுள்ளது. பல்வேறு துறைகளுக்கு நிவாரணம், மறுசீரமைப்பு பணிக ளுக்காக தமிழக அரசு இதுவரை 2 ஆயிரத்து 301 கோடியே 41 லட்சம் ஒதுக்கியுள்ளன. கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முழுமையான கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படும்.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி கூறினார்.

SCROLL FOR NEXT