கும்மிடிப்பூண்டி அருகே வரும் 28-ம் தேதி (நாளை) தண்டவாள பராமரிப்பு பணி நடக்கவுள்ளதால், இந்த மார்க்கத்தில் 8 மின்சார ரயில்களின் சேவையில் ஒரு பகுதி ரத்து செய்யப்படுகிறது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கும்மிடிப்பூண்டி அருகே வரும் 28-ம் தேதி காலை 9.15 மணி முதல் 11.55 மணி வரையில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன. இதனால், ரயில்சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு காலை 8.15. 9.30, 10.25 மணிக்கு புறப்பட்டு செல்லும் மின்சார ரயில்கள் மீஞ்சூர் வரையிலும், காலை 9 மணிக்கு புறப்பட்டு செல்லும் ரயில் எண்ணூர் வரை மட்டுமே இயக்கப்படும்.
இதேபோல், கும்மிடிப் பூண்டியில் இருந்து சென்ட்ரலுக்கு காலை 9.50, 10.50, 11.20 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில்கள் மீஞ்சூரில் இருந்து இயக்கப்படும். சூளூர்பேட்டையில் இருந்து சென்ட்ரலுக்கு காலை 10 மணிக்கு இயக்க வேண்டிய மின்சார ரயில் கும்மிடிப்பூண்டி வரை மட்டுமே இயக்கப்படும்.