வெப்ப சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறும்போது, “குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை கடலுக்குள் நீண்ட தொலைவில் இருப்பதால் அதன் தாக்கம் எதுவும் இல்லை. வெப்ப சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்” என்றார்.