தமிழகம்

ஆசிரியர் போராட்டத்தால் அரசு பள்ளி மூடல்: மாணவர்களின் மாற்றுச் சான்றிதழ் கேட்டு பெற்றோர் மறியல்

செய்திப்பிரிவு

தமிழகம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் கடந்த 22-ம் தேதி முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 7-வது நாளாக நேற்றும் போராட்டம் தொடர்ந்தது.

பொள்ளாச்சி கல்வி மாவட்டத் தில் ஆனைமலை வட்டாரக் கல்வி அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 85 பள்ளிகளில் பணியாற்றும் 304 ஆசிரியர்களில் 263 பேர் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதனால் 11 பள்ளிகள் ஆசிரியர் கள் வருகையின்றி மூடப்பட்டுள் ளன. பிற பள்ளிகள் ஓரிரு ஆசிரியர் களைக் கொண்டு செயல்பட்டு வருகின்றன.

இதில் ஆனைமலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கடந்த ஒரு வாரமாக மூடப்பட்டதால், தினமும் மாணவர்கள் பள்ளிக்கு வந்து வீட்டுக்குத் திரும்பிச் சென்ற னர். நேற்றும் பள்ளி மூடப்பட்டு இருந்ததால் கோபமடைந்த பெற்றோர், மாணவர்களை தனியார் பள்ளியில் சேர்க்க முடிவு செய்துள் ளதாகவும் மாற்றுச் சான்றிதழ் வழங்க கோரியும் பொள்ளாச்சி சேத்துமடை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீ ஸார் பள்ளியைத் திறக்க கல்வித் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும், போராட்டத்தைக் கைவிடுமாறும் பெற்றோரிடம் கூறினர். உடனடி யாக அரசு உதவிபெறும் பள்ளியில் இருந்து மாற்றுப்பணியில் ஓர் ஆசிரியர் இந்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டார். இதையடுத்து பெற்றோர் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதுகுறித்து பெற்றோர் கூறும் போது, ‘அரசுப் பள்ளியில் மாணவர் களை சேர்க்கக் கூறி ஆசிரியர் கள் பெற்றோரிடம் பிரச்சாரம் செய் கின்றனர். பின்னர் மாணவர்க ளின் கல்வி நலனை கருத்தில் கொள்ளாமல் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். போராட்டத்தால் ஆசிரியர்கள் நலன் பாதுகாக்கப் படும். ஆனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. எனவே தான் மாணவர்களின் எதிர்காலத் தைக் கருத்தில் கொண்டு தனியார் பள்ளியில் சேர்க்க மாற்றுச் சான்றிதழ் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டோம்’ என்றனர்.

SCROLL FOR NEXT