தமிழகம்

தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வருபவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும்: செயின்ட் கோபைன் ஆலை தொடக்க விழாவில் முதல்வர் உறுதி

செய்திப்பிரிவு

தமிழகத்தில் தொடங்க முன்வருபவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்யும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

பெரும்புதூரில் உள்ள செயின்ட் கோபைன் நிறுவனம் ரூ.1200 கோடி முதலீட்டில் 3-ம் உலகத் தரம் வாய்ந்த கண்ணா டித் தொழிற்சாலைகளை தொடங்கியது. இதனைத் தொடங்கி வைத்து முதலமைச்சர் பழனிசாமி பேசியதாவது:

தமிழகத்தில் தொழில் நிறுவனங்களை தொடங்குவதற்கு சிறந்த உள்கட்டமைப்பு வசதியும், தொழில் தொடங்குவதற்கு தேவை யான உதவிகளைச் செய்வதில் வெளிப்படையான அணுகுமுறை யும் அரசிடம் உள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த வும், தொழில் துறையில் தமிழ கத்தை மேம்படச் செய்யவும் நாங்கள் உறுதி கொண்டுள்ளோம்.

தமிழகத்தில் தொழில் தொடங்கு வதற்கான சூழலை உருவாக்கு வதற்கான பல்வேறு நடவடிக்கை கள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையில் 2023-க்குள் புதிதாக 5 ஆயிரம் புதிய தொழில்கள் உருவாக்கத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

தொழில் துறையில் சிறந்த தொழில் மாநிலங்கள் வரிசையில் தமிழ்நாடு 6-ம் இடத்தில் இருந்து 2-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. இதனைத் தேசிய பயன்பாட்டுப் பொருளாதார ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொழில் வளர்ச்சியின் மூலம் வேலைவாய்ப்பை அதிகரித்தல், சம வளர்ச்சியை ஏற்படுத்துதல் போன்றவை அரசின் நோக்கமாகும். சுற்றுச் சூழலை பாதுகாப்பதிலும் அரசு கவனம் செலுத்தி வருகிறது. ஏற்கெனவே நடைபெற்ற தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் 3 லட்சத்து 437 கோடிக்கு முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. இதனால் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த செயின்ட் கோபைன் நிறுவனம் சிறந்த கண்ணாடி தயாரிக்கும் நிறுவனமாக உள்ளது. பிரான்ஸ் நாட்டு மன்னர் 14-ம் லூயிஸ் இந்த நிறுவனத்தில் முதல் வாடிக் கையாளர் என்பது குறிப்பிடத்தக் கது. இந்த நிறுவனம் தற்போது 1,200 கோடி முதலீட்டில் மூன்றாம் உலகத்தரம் வாய்ந்த தொழிற் சாலையை தொடங்கியிருப்பது பாராட்டுக்குரியது. இதுபோல் பல தொழிற்சாலைகள் தமிழகத்தில் உருவாக வேண்டும். மழைநீர் சேகரிப்புத் திட்டம், சுற்றுச்சூழலை காக்கும் செயல்பாடுகளுக்காக இந்நிறுவனத்தைப் பாராட்டலாம். தமிழக அரசு கொண்டு வந் துள்ள பிளாஸ்டிக் தடையையும் இந்நிறுவனத்தில் செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள் கிறேன். இந்த நிறுவனம் கடந்த வாரம் நடைபெற்ற உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் மேலும் ரூ.740 கோடியை முதலீடு செய்ய முன்வந்துள்ளது. இந்நிறுவனம் முதலீடு செய்ய முன்வந்தால் அதற்குத் தேவையான உதவிகளை அரசு செய்யும்.

இவ்வாறு முதல்வர் கூறினார்.

நிகழ்ச்சியில் தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்ஜ மின், தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலர் ஞானதேசிகன், செயின்ட் கோபைன் நிறுவனத்தின் தலைவர், தலைமை நிர்வாக இயக்குநர் பைரோ ஆண்ட்ரி டேசா லெண்டர், செயின்ட் கோபைன் இந்தியா நிறுவனத்தின் தலை வர் ஆனந்த் ஒய்.மஹாஜன், நிர்வாக இயக்குநர் பி.சந்தானம், மக்களவை, சட்டமன்ற உறுப்பினர் கள் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT