தமிழகம்

கோவை மாநகராட்சியால் சுத்திகரிப்பு செய்யப்பட்ட நீரை வாங்க நிறுவனங்கள் தயக்கம்

செய்திப்பிரிவு

மாநகராட்சி நிர்வாகத்தால் சுத்தி கரிப்பு செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் நீரை வாங்க நிறுவனங்கள் தயங்குகின்றன.

மாநகரில் மத்திய அரசின் ஜவ ஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் நிதி யுதவி பெற்று பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. முதல்கட்ட பாதாள சாக்கடை திட்டத்துக்காக உக்கடத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டது. இந்த நிலையத்தில் தினசரி 70 எம்.எல்.டி அளவுக்கு கழிவுநீர் சுத்திகரிப்பு செய்ய திட்ட மிடப்பட்டது.

ஆனால், தற்போது தினசரி 40 எம்.எல்.டி அளவுக்கு மட்டுமே கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு நல்ல நீராக மாற் றப்படுகிறது. சுத்திகரிப்பு செய்யப் பட்ட நீர் வீணாக ஆற்றுப்பகுதியில் விடப்பட்டுகிறது. இவ்வாறு வீணாகும் சுத்திகரிப்பு செய்யப் பட்ட நீரை, விற்பனை செய்ய மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டது.

1,000 லிட்டர் சுத்திகரிப்பு செய்யப்பட்ட நீருக்கு ரூ.16.70 பைசா என விலை நிர்ணயிக்கப் பட்டது. சுத்திகரிப்பு செய்யப்பட்ட நீரை தேவைப்படுவோர் வாங்கிக் கொள்ளலாம் என அறிவிக்கப் பட்டு கோவை மாநகராட்சியால் கடந்த ஆண்டு டெண்டர் நடத்தப் பட்டது.

இதில் செட்டிபாளையத்தை சேர்ந்த தனியார் கோல்ப் கிளப் நிர்வாகத்தினர் உள்ளிட்ட இருவர் பங்கேற்றனர். கோல்ப் கிளப் நிர்வாகத்தினர் ஆயிரம் லிட்டருக்கு ரூ.11.60, மற்றொரு நிறுவனத்தினர் ஆயிரம் லிட்டருக்கு ரூ.8 என விலை நிர்ணயம் செய்து டெண்டரில் குறிப்பிட்டிருந்தனர். மாநகராட்சி நிர்வாகத்தால் நிர்ணயம் செய்யப் பட்ட தொகைக்கும், டெண்டரில் கோரப்பட்டிருந்த தொகைக்கும் விலை வேறுபாடு இருந்தது.

இருப்பினும் இந்த இரு நிறுவனங்களில், கோல்ப் கிளப் நிர்வாகத்தினர் குறிப்பிட்ட ரூ.11.60 என்ற கட்டணத்தொகை மாநகராட்சி நிர்வாகத்தால் ஏற்கப் பட்டது. இதையடுத்து அந்த தனி யார் கோல்ப் கிளப் நிர்வாகத் தினரும் ஒரு லிட்டருக்கு ரூ.11.60 என்ற தொகை அடிப்படையில், தினசரி ஐந்து லட்சம் லிட்டர் சுத்திகரிப்பு செய்யப்பட்ட நீரை வாங்க முடிவு செய்து அதற்கான தொகையைக் கட்டினர்.

உக்கடம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து செட்டிபாளையம் வரை பதிக்கப்பட்ட தரைவழிக்குழாய் மூலம் இந்த சுத்திகரிப்பு செய்யப்பட்ட நீரை தினசரி கொண்டு செல்ல கடந்த ஜூலையில் திட்டமிடப்பட்டது.

ஆனால், அதன்பின்னர், அந்த கோல்ப்கிளப் நிர்வாகத்தினர் சுத்திகரிப்பு செய்யப்பட்ட நீரை மாநகராட்சி நிர்வாகத்திடம் இருந்து வாங்கவில்லை. இதனால் சுத்திகரிக்கப்பட்ட நீர் மீண்டும் ஆற்றுப்பகுதியில் விடப்படுகிறது. அதேபோல், மாநகராட்சியால் நிர்ணயிக்கப் படும் விலை அதிகளவில் உள்ளதால் மற்ற தனியார் நிறுவனங்கள் இந்நீரை வாங்க தயங்குவதாக கூறப்படுகிறது. இதனால் சுத்திகரிக்கப்பட்ட நீரை விற்பனை செய்ய மீண்டும் டெண்டர் நடத்தலாமா அல்லது விலையை குறைக்கலாமா என மாநகராட்சி நிர்வாகத்தினர் ஆலோசித்து வருகின்றனர்.

மாநகராட்சி அதிகாரிகள் கூறும் போது, ‘‘சுத்திகரிப்பு செய் யப்பட்ட கழிவுநீரை விற்பனை செய்ய ஆலோசிக்கப்பட்டு வருகிறது,’’ என்றனர். சமூகஆர்வலர்கள் கூறும் போது, ‘‘சுத்திகரிப்பு செய்யப்பட்ட நீரை வீணாக்காமல் மாநகராட்சி பூங் காக்கள் பராமரிப்பு, கழிவறை கள் பராமரிப்புக்கு பயன்படுத்த லாம்,’’ என்றனர்.சுத்திகரிப்பு செய்யப் பட்ட நீர் வீணாக ஆற்றுப்பகுதியில் விடப்பட்டுகிறது. இவ்வாறு வீணாகும் சுத்திகரிப்பு செய்யப் பட்ட நீரை, விற்பனை செய்ய மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டது.

SCROLL FOR NEXT