தமிழகம்

SIR | கன்னியாகுமரியில் 1.53 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்!

செய்திப்பிரிவு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 27-10.2025 வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் 15,92,872 வாக்காளர்கள் இடம்பெற்றிருந்தனர். இதில் ஆண்கள் 7,92,064 பேர், பெண்கள் 8,00,643 பேர்.

இந்நிலையில், எஸ்ஐஆர் கணக்கீட்டு படிவம் வழங்கப்பட்டு பூர்த்தி செய்து திரும்பப் பெறப்பட்டன. இந்த படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை குமரி மாவட்ட தேர்தல் அலுவலர் அழகுமீனா அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இன்று வெளியிட்டார்.

அதன்படி குமரி மாவட்டத்தில் 14,39,499 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 7,19,973 பேர், பெண்கள் 7,19,386 பேர். பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். மொத்தம் 1,53,373 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

தொகுதி வாரியாக மொத்த வாக்காளர்கள் விவரம்:

கன்னியாகுமரி: 2,74,069

நாகர்கோவில்: 2,43,329

குளச்சல்: 2,513,88

பத்மநாபபுரம்: 2,24,140

விளவங்கோடு: 2,14,360

கிள்ளியூர்: 2,32,213

மொத்தம்: 14,39,499

கன்னியாகுமரி மாவட்டத்தில் வாக்குச்சாவடி மறுசீரமைப்பிற்கு முன்பு 1,702 வாக்குச்சாவடிகள் இருந்தன. மறுசீரமைப்பிற்கு பின்னர் தற்போது வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை 1,914 ஆக உயர்ந்துள்ளது. 212 வக்குச்சாவடிகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT