சென்னை மாவட்டத்தின் 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், இன்று வெளியிட்டார்.
வாக்காளர் பட்டியல் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி உதவி ஆணையாளர் அலுவலகங்களிலும், வாக்குச்சாவடி மையங்களிலும் பொதுமக்கள் பார்வையிடலாம் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
கடந்த 01.09.2018 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி சென்னை மாவட்டத்தினைச் சார்ந்த 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான மொத்த வாக்காளர்களது எண்ணிக்கை விவரம்.
சென்னையின் 16 தொகுதிகளின் மொத்த வாக்காளர்கள் 37 லட்சத்து 92 ஆயிரத்து 126
ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 18 லட்சத்து 71 ஆயிரத்து 638 பேர்
பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 19 லட்சத்து19 ஆயிரத்து 582 பேர்
மூன்றாம் பாலின வாக்காளர்கள் 906 பேர்.
2019-ம் ஆண்டு சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் தொடர்பாக 1,16,385 பெயர் சேர்த்தல் மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது. அதில் 5,281 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. ஏற்றுக்கொள்ளப்பட்ட மனுக்கள் 1,11,104. அதன் விவரம் கீழ்வருமாறு
1. ஆண்கள் 55,023
2. பெண்கள் 56,034
3 இதரர் 47
மொத்தம் 1,11,104
வாக்குச்சாவடி நிலை அலுவர்களது களஆய்வின் போது கண்டறியப்பட்ட இடம் பெயர்ந்தோர், காலமானோர் மற்றும் வாக்காளர் பட்டியல்களில் ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகளில் இடம் பெற்றோர் மற்றும் வாக்காளர் பட்டியல்களில் பெயர் நீக்கம் செய்ய கோரி வரப்பெற்ற படிவம்-7ன் எண்ணிக்கை 4,666 ஆகும்.
அவற்றில் வாக்காளர் பதிவு அலுவலர்களது விசாரணைக்கு பின்னர் வாக்காளர் பட்டியல்களிலிருந்து பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,371 ஆகும். மேலும் 79,860 பெயர்கள் தகுதியின்மை அடிப்படையில் தன்னிச்சையாக நீக்கம் செய்யப்பட்டன.
அவ்வாறு வாக்காளர் பட்டியல்களிலிருந்து பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டவர்களது எண்ணிக்கை விவரங்கள்
1. ஆண்கள் 42,672
2. பெண்கள் 41,538
3 இதரர் 21
மொத்தம் 84,231 பேர்
இன்று வெளியிடப்பட்ட இறுதி திருத்தப் பட்டியலுக்கு பின்னர் சென்னை மாவட்டத்தில் அமையப்பெற்ற
16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர்களது எண்ணிக்கை விவரங்கள்:
1. டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர் (ஆர்.கே.நகர்)- மொ.வாக்காளர்கள்- 2,45,466, ஆண்- 1,18,640, பெண்- 1,26,717, மூன்றாம் பாலினத்தவர்-109
2. பெரம்பூர் தொகுதி- மொ.வாக்காளர்கள்- 2,91,571, ஆண்-1,44,103, பெண்- 1,47,415, மூன்றாம் பாலினத்தவர்-53
3. கொளத்துர் தொகுதி- மொ.வாக்காளர்கள்- 2,64,167, ஆண்-1,29,677, பெண்- 1,34,427, மூன்றாம் பாலினத்தவர்-63
4. வில்லிவாக்கம் தொகுதி- மொ.வாக்காளர்கள்- 2,45,298, ஆண்-1,20,826, பெண்-1,24,415, மூன்றாம் பாலினத்தவர்-57
5. திரு.வி.க.நகர் (தனி) தொகுதி- மொ.வாக்காளர்கள்- 2,07,845, ஆண்-1,01,074, பெண்- 1,06,725, மூன்றாம் பாலினத்தவர்-46
6. எழும்பூர் (தனி) தொகுதி- மொ.வாக்காளர்கள்- 1,78,780, ஆண்-88,727, பெண்- 90,017, மூன்றாம் பாலினத்தவர்-36
7. இராயபுரம் தொகுதி- மொ.வாக்காளர்கள்-1,75,833, ஆண்-86,335, பெண்- 89,453, மூன்றாம் பாலினத்தவர்-45
8. துறைமுகம் தொகுதி- மொ.வாக்காளர்கள்- 1,66,515, ஆண்-87,039, பெண்- 79,427, மூன்றாம் பாலினத்தவர்-49
9. சேப்-திருவல்லிக்கேணி தொகுதி- மொ.வாக்காளர்கள்-2,23,661, ஆண்-1,09,896, பெண்- 1,13,737, மூன்றாம் பாலினத்தவர்-28
10. ஆயிரம் விளக்கு தொகுதி- மொ.வாக்காளர்கள்- 2,31,851, ஆண்-1,13,608, பெண்- 1,18,159 , மூன்றாம் பாலினத்தவர்-84
11. அண்ணா நகர் தொகுதி- மொ.வாக்காளர்கள்- 2,70,498, ஆண்-1,33,262, பெண்- 1,37,170 , மூன்றாம் பாலினத்தவர்-66
12. விருகம்பாக்கம் தொகுதி- மொ.வாக்காளர்கள்- 2,69,995, ஆண்-1,35,151, பெண்- 1,34,770, மூன்றாம் பாலினத்தவர்-74
13. சைதாப்பேட்டை தொகுதி- மொ.வாக்காளர்கள்- 2,66,150, ஆண்- 1,31,184, பெண்- 1,34,898, மூன்றாம் பாலினத்தவர்-68
14. தியாகராயநகர் தொகுதி- மொ.வாக்காளர்கள்- 2,28,762, ஆண்-1,13,043, பெண்- 1,15,680 , மூன்றாம் பாலினத்தவர்-39
15. மயிலாப்பூர் தொகுதி- மொ.வாக்காளர்கள்- 2,55,655, ஆண்- 1,24,160, பெண்- 1,31,460, மூன்றாம் பாலினத்தவர்-35
16. வேளச்சேரி தொகுதி- மொ.வாக்காளர்கள்- 2,96,952, ஆண்-1,47,264, பெண்- 1,49,608 மூன்றாம் பாலினத்தவர்-80
தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதி பட்டியலில் வாக்காளர்களது எண்ணிக்கை. கடந்த 1.09.2018 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்களது எண்ணிக்கையினைவிட 26,873 அதிகம்.
குறைவான வாக்காளர்கள் கொண்ட தொகுதி துறைமுகம் தொகுதி ஆகும் (1,66,515 வாக்காளர்கள் உள்ளனர்).
அதிகமான வாக்காளர்கள் கொண்ட தொகுதி வேளச்சேரி தொகுதி ஆகும் (2,96,952 வாக்காளர்கள் உள்ளனர்).
இந்த சுருக்கமுறைத் திருத்தத்தில் புதிதாக பெயர்கள் சேர்க்கப்பட்ட வாக்காளர்களில் 18 வயதுக்கு மேற்பட்ட புதிய வாக்காளர்களின் எண்ணிக்கை 43,829 ஆகும். புதிதாக சேர்க்கப்பட்டவர்களுக்கு அடையாள அட்டை உடனடியாக வழங்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.