ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி தேமுதிக வேட்பாளர் காமராஜின் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட மொத்தம் 23 பேர் மனு தாக்கல் செய்து இருந்தனர். இந்த மனுக்கள் மீதான பரிசீலனை ஆலந்தூர் மண்டல அலுவலகத்தில் திங்கள் கிழமை நடைபெற்றது. தேர்தல் பார்வையாளர் நரேன்குமார், தேர்தல் அதிகாரி ராஜாராம் ஆகி யோர் முன்னிலையில் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டன.
திமுக வேட்பாளர் ஆர்.எஸ்.பாரதி, அதிமுக வேட்பாளர் வெங்கட்ராமன், காங்கிரஸ் வேட் பாளர் நாஞ்சில் ஈஸ்வர பிரசாத் ஆகியோரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. தேமுதிக வேட் பாளர் ஏ.எம்.காமராஜ் மனு மீதான பரிசீலனை நடந்தது. அப்போது காமராஜின் சொத்து விவரம் குறித்து ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் ஞானி சங்கரன் ஆட்சேபணை தெரிவித்தார். இதனால் காமராஜின் மனு நிலுவையில் வைக்கப்பட்டது.
இந்நிலையில் செவ்வாய்க் கிழமை காலை தேமுதிக வேட்பாளர் மனு மீதான விசாரணை நடந்தது.
பின்னர் “சட்டமன்ற தேர்தலில் போட்டியிட காமராஜ் தாக்கல் செய் துள்ள மனுவில் சரியான சொத்து விவரங்களைத்தான் கொடுத்துள்ளார். எனவே, அவரது வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்படுகிறது” என்று தேர்தல் அதிகாரி ராஜாராம் அறிவித்தார்.