தமிழகம்

மாண்டலின் ஸ்ரீநிவாஸ் மறைவு கர்நாடக இசைத் துறைக்கு பேரிழப்பு: மியூசிக் அகாடமி செயற்குழு இரங்கல் தீர்மானம்

செய்திப்பிரிவு

பிரபல கர்நாடக இசைக்கலைஞர் மாண்டலின் ஸ்ரீநிவாஸின் மறைவுக்கு மியூசிக் அகாடமி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது.

சென்னை மியூசிக் அகாடமியின் செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. மியூசிக் அகாடமி தலைவர் ‘இந்து’ என்.முரளி தலைமையில் நடந்த கூட்டத்தில், மாண்டலின் ஸ்ரீநிவாஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் விவரம் வருமாறு:

மாண்டலின் ஸ்ரீநிவாஸின் அகால மறைவுக்கு செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரி வித்துக் கொள்கிறது. அவர், தனது 11-ம் வயதில் இருந்தே இசையில் வியக்கத்தக்க வளர்ச்சி கண்டு இசைமேதையாக உருவான ஒரு குழந்தை மேதாவி. மேற்கத்திய வாத்தியமான மாண்டலினை கர்நாடக இசை நுட்பங்களுடன் இணைத்தவர்.

மாண்டலின் என்றதுமே ஸ்ரீநிவாஸ் பெயர்தான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு அவரது பெயர் மாண்டலினுடன் பின்னிப் பிணைந்துவிட்டது. தமது இனிமையான மாண்டலின் இசை யினால் இந்தியாவிலும் உலக நாடுகளிலும் லட்சக்கணக்கான ரசிகர்களை தன்வயப்படுத்தினார்.

அவருக்கும் மியூசிக் அகாடமிக் கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. 1983-ம் ஆண்டு தொடங்கி 30 ஆண்டுகளுக்கு மேலாக அத்தொடர்பு நீண்டநெடியது. 2002-ம் ஆண்டு தவிர தொடர்ந்து மியூசிக் அகாடமியின் வருடாந்திர இசை விழாக்களில் பங்கெடுத்தார். அவரது மறைவால் கர்நாடக இசை உலகம் ஒரு மாபெரும் கலை ஞனையும் நல்ல மனிதனையும் இழந்துவிட்டது. அவரது இழப்பு மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற் படுத்தியுள்ளது. மாண்டலின் ஸ்ரீநிவாஸை இழந்து வாடும் அவரது குடும்பத் தாருக்கு செயற்குழு ஆழ்ந்த அனுதாபத்தையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறது.இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

SCROLL FOR NEXT