தமிழகம்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கண்ணை இழந்த ஆசிரியருக்கு செயற்கை கண்

செய்திப்பிரிவு

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கண்ணை இழந்த ஆசிரியருக்கு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் செயற்கைக் கண் பொருத்தப்பட்டது.

உத்தரபிரதேச மாநிலம் அஸம்கார் மாவட் டத்தைச் சேர்ந்தவர் தினேஷ் யாதவ் (49). ஆசிரி யரான இவரது வலது கண்ணில் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், 6 மாதத்துக்கு முன்பு வலது கண் அகற்றப்பட்டது. ஒரு கண் இல்லாததால் மனஉளைச்சலில் இருந்த இவர் மற்றவர்களிடம் பழகுவதை நிறுத்திவிட்டார்.

இந்நிலையில் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் செயற்கைக் கண் பொருத்தப்படுவதை அறிந்த இவர் மருத்துவ மனைக்கு வந்தார். டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்துவிட்டு, அவருக்கு செயற்கைக் கண் பொருத்த முடிவு செய்தனர்.

இதையடுத்து மருத்துவமனை டீன் எஸ்.பொன்னம்பல நமசிவாயம் அறிவுரையின்படி பல் மருத்துவத் துறையின் தலைவர் கா.பாக் கியலட்சுமி தலைமையில் டாக்டர்கள் கு.கோமதி, ராம்குமார், து.கார்த்திகேயன், கவிதா, ச.அனிதா லாவண்டினா மற்றும் பணியாளர்கள் பெ.சிவகுமார், விஜி ஆகியோர் கொண்ட குழுவினர் இவருக்கு வெற்றிகரமாக செயற்கைக் கண்ணை (ஒரு விதமான பிளாஸ்டிக்) பொருத்தினர்.

செயற்கைக் கண் பொருத்தப்பட்ட பின்னர் மனஉளைச்சலில் இருந்து மீண்ட அவர் மகிழ்ச்சியாக இருக்கிறார். இதுதொடர்பாக பல் மருத்துவத் துறையின் தலைவர் கா.பாக் கியலட்சுமி கூறியதாவது:

தினேஷ் யாதவ் கண் இல்லாததாலும், அந்த இடம் குழியாக இருந்ததாலும் மிகவும் மனவேதனையில் இருந்தார். இவருக்கு தற்போது ஒருவிதமான பிளாஸ்டிக்கால் செய் யப்பட்ட செயற்கைக் கண் பொருத்தப்பட்டுள் ளது. தற்போது இவர் மகிழ்ச்சியாக இருக் கிறார். இவரிடம் தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது.

கண் குழியை அளவு எடுத்து முதலில் மெழுகில் செய்யப்பட்ட கண் பொருத்தப்பட் டது. பின்னர், தோலின் நிறம் இடது கண்ணின் நிறம் போன்றவற்றை ஒப்பிட்டு செய்யப்பட்ட செயற்கைக் கண் பொருத்தப்பட்டுள்ளது. கண்ணின் மேல் புறத்தில் இமைகளும் செயற்கையாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த செயற்கைக் கண்ணால் பார்க்க முடியாது. ஆனால், கண் இருப்பதைப் போல் தோற்றம் இருக்கும். இந்த மருத்துவமனை யில் இலவசமாக பொருத்தப்பட்டுள்ள செயற் கைக் கண்ணை தனியார் மருத்துவமனையில் பொருத்த ரூ.50 ஆயிரம் வரை செலவாகும்.

செயற்கை கண்ணைப் போலவே சாலை விபத்து, தீ விபத்து உள்ளிட்ட விபத்துகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செயற்கையாக உருவாக்கப்பட்ட காது, மூக்கு, பற்கள், பற் களுடன் கூடிய அடைப்பு தட்டு, விழியின் தகடு போன்ற உறுப்புகள் பொருத்தப்படுகின்றன.

SCROLL FOR NEXT