தமிழகம்

பிரியங்கா காந்திக்கு திருநாவுக்கரசர் வாழ்த்து 

செய்திப்பிரிவு

காங்கிரஸ் பொதுச் செயலாள ராக பிரியங்கா காந்தி நியமிக்கப் பட்டிருப்பதை முழுமனதோடு வர வேற்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

இந்திரா காந்தியின் பேத்தியும், ராஜீவ் சோனியாவின் மகளுமான பிரியங்கா காந்தியை காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக கட்சித் தலைவர் ராகுல் காந்தி நியமித்துள்ளார். இதை தமிழக காங்கிரஸ் சார்பிலும், என் சார்பிலும், காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் சார்பிலும் முழுமனதோடு வரவேற்கிறேன்.

ராகுல் காந்திக்கு பக்கபலமாக செயல்படவும், காங்கிரஸுக்கு மேலும் வலு சேர்த்திடவும் பிரியங்கா காந்திக்கு எனது மனம்நிறைந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவருடன் அறிவிக்கப்பட்டுள்ள இதர பொதுச் செயலாளர்களுக்கும் தமிழக காங்கிரஸ் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT