தமிழகம்

இரவில் ரோந்து செல்லும் போலீஸுக்கு போக்குவரத்து படி ரூ.2 ஆயிரமாக உயர்வு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

ரோந்து போலீஸாருக்கான போக்குவரத்து படியை ரூ.1,500 முதல் ரூ.2,000 வரை உயர்த்த வேண்டும். இதுதொடர்பாக உள்துறை செயலர் 2 மாதத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரோந்து பணியில் ஈடுபடும் போலீஸாருக்கு வழங்கப்படும் போக்குவரத்து படி குறைவாக வழங்கப்படுவதாக ஊடகங்களில் வெளியான செய்தி அடிப்படையில் உயர் நீதிமன்ற மதுரை கிளை பதிவாளர் பொதுநலன் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.

ஊதியத்தை செலவிடும் நிலை

அதில், போலீஸார் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். இதற்காக போலீ ஸார் இரு சக்கர வாகனம் அல்லது நான்கு சக்கர வாகனங்களில் செல்கின்றனர். இவ்வாறு ரோந்து பணிக்குச் செல்லும் போலீஸா ருக்கு போக்குவரத்து படி குறை வாக வழங்கப்படுகிறது. சில நேரங்களில் அவை வழங்கப்படுவ தில்லை.

இதனால் ரோந்து பணிக்காக போலீஸார் தங்கள் ஊதியத்தை செலவிடும் நிலை உள்ளது. செலவுக்கு பயந்து ரோந்து பணிக்குச் செல்வதை போலீஸார் தவிர்த்தால் சட்டம், ஒழுங்கு பிரச் சினை ஏற்படும். எனவே, ரோந்து போலீஸாருக்கு உரிய படி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு அமர்வு நேற்று அளித்த தீர்ப்பு:

கிராமம் மற்றும் நகரங்களில் ரோந்து பணிக்குச் செல்லும் போலீஸாருக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.1,500 முதல் 2,000 வரை போக்குவரத்து படி வழங்க வேண்டும் என நீதிமன் றம் கருதுகிறது. ரோந்து பகுதி, போக்குவரத்து செலவு ஆகிய வற்றை கருத்தில் கொண்டு போக்கு வரத்து படியை அதிகாரிகள் நிர்ணயம் செய்யலாம். இது தொடர்பாக உள்துறை செயலர் 2 மாதத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

SCROLL FOR NEXT