புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே தொட்டியப் பட்டியைச் சேர்ந்த பழனிவேல் மனைவி பொன்னுமணி (28) கடந்த 17-ம் தேதி தனது வீட்டில் காஸ் அடுப்பில் சமையல் செய்துகொண்டிருந்தார். அப்போது, சிலிண்ட ரில் இருந்து காஸ் கசிவு ஏற்பட்டு எதிர்பாராதவிதமாக பொன்னுமணி மீது தீப்பற்றியது. அப்போது, அலறித் துடித்த பொன்னுமணியை அவரது மகன் சஞ்சய் (5) மகள் சங்கவி (3) ஆகியோர் ஆபத்தை உணராமல் கட்டிப் பிடித்துள்ளனர். இதைத்தொடர்ந்து அவர்கள் மீதும் தீப்பற்றியது.
மூவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு இலுப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச் சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட 3 பேரும் சிகிச்சை பலனின்றி நேற்று அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து இலுப்பூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.