தமிழகம்

மாணவர்களுக்கு பாடம் நடத்திய எம்எல்ஏ

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மாவட்டத் தில் 90 சதவீத தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள், வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்களின் கல்விக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க மாற்று ஏற்பாடு களை பள்ளிக் கல்வித் துறை செய்து வருகிறது. இருப்பினும், அனைத் துப் பள்ளிகளும் முழுமையாக இயங்கவில்லை.

இந்நிலையில் கலசப்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர் பன்னீர் செல்வம், தனது தொகுதிக்கு உட்பட்ட கலசப்பாக்கம் மற்றும் ஜமுனாமரத்தூர் ஒன்றியங்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு சென்று நேற்று ஆய்வு செய்தார். அப்போது, ஜவ்வாது மலையடிவாரம் தானியார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி பூட்டிக் கிடந்தது. பள்ளிக்கு வெளியே மாணவ- மாணவிகள் அமர்ந்திருந்தனர்.

இதையறிந்த சட்டப்பேரவை உறுப்பினர் பன்னீர்செல்வம், பள்ளியை திறக்க நடவடிக்கை எடுத்தார். அப்போது, மாணவர் ஒருவரிடம் இருந்த சாவியை பெற்று பள்ளியை திறந்து பாடம் நடத்தினார். பின்னர், அந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் வந்ததும், அவர்களிடம் பாடம் நடத்துமாறு அறிவுறுத்தினார். இதையடுத்து, பட்டறைக்காடு மற்றும் வதியன்கொட்டாய் ஆகிய கிராமங்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு சட்டப் பேரவை உறுப்பினர் பன்னீர் செல்வம் பாடம் நடத்தினார்.

SCROLL FOR NEXT