நீர்நிலை ஆக்கிரமிப்பாளர் பெயர் களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கக் கூடாது, ஆக்கிரமிப்பு கட்டிடங்களுக்கு மின் இணைப்பு வழங்கக் கூடாது என உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தர விட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
தமிழகத்தில் நீர்நிலைகள், குளங்கள் நாளுக்கு நாள் ஆக்கிர மிக்கப்பட்டு, வீடுகள், வணிக வளாகங்கள் கட்டப்பட்டு வருகின் றன. இதனால் மழை நீரை சேகரிக்க வழியின்றி நிலத்தடி நீர் அதல பாதாளத்துக்குச் சென்று விட்டது. நீர் நிலைகளைக் காப்பாற்ற உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி. ஆதி கேசவலு அமர்வு நேற்று பிறப்பித்த உத்தரவு:
நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து, கடந்த 2017-ம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்ட வழிகாட்டுதல்படி எடுக்கப்பட்ட நடவடிக்கையை தலைமைச் செயலர் பிப். 11-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.
மாவட்ட ஆட்சியர்கள், தங்களது மாவட்ட நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் நீர் நிலைகளின் வரைபடங்களின் நகல்களை சார்-பதிவாளர் அலு வலகங்களுக்கும், மின்வாரியத் துக்கும், உள்ளாட்சி அமைப்பு களுக்கும், தேர்தல் அதிகாரிக்கும் பிப். 8-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
நீர்நிலைகளில் கட்டிடங்களை பதிவு செய்யக்கூடாது என தமிழக பதிவுத்துறை தலைவர் அனைத்து சார்- பதிவாளர்களுக்கும் சுற்ற றிக்கை அனுப்ப வேண்டும்.
நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள எந்தவிதமான கட்டிடங்களுக்கும் மின் இணைப்பு வழங்கக்கூடாது என்பதை மின்வாரிய அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள அனைத்து கட்டிடங் களுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கக்கூடாது என்பதை அனைத்து உள்ளாட்சி அமைப்பு களுக்கும் நகராட்சி நிர்வாகத்துறை முதன்மைச் செயலாளர் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.
ஆக்கிரமிப்புக் கட்டிடங்களுக்கு சொத்து வரி உள்ளிட்ட எந்த வரியும் வசூலிக்கக்கூடாது.
நீர்நிலை ஆக்கிரமிப்பாளர் களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கக்கூடாது என்று தலைமை தேர்தல் அதிகாரி சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.
மேற்கண்ட உத்தரவு குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் பிப்.13-ல் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதி கள் உத்தரவில் கூறியுள்ளனர்