தமிழகம்

தீயணைப்புத் துறை துணை இயக்குநர் மீனாட்சிக்கு குடியரசுத் தலைவர் விருது

செய்திப்பிரிவு

காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் சிறப்பாக பணி புரிந்தவர்களுக்கு ஆண்டுதோறும் குடியரசுத் தலைவர் விருதுகள் வழங்கப்படுகின்றன.

இந்த ஆண்டு தீயணைப்புத் துறையின் துணை இயக்குநர் மீனாட்சி விஜயகுமார், மாவட்ட அதிகாரி மனோகரன், நிலைய அதிகாரி அரிராமன் முத்து, தீயணைப்பு வாகன ஓட்டுநர் அருணாசலம், தீயணைப்பாளர் ரமேஷ்குமார் ஆகிய 5 பேருக்கு குடியரசுத் தலைவரின் மெச்சத்தக்க விருதுகள் வழங்கப்படுகின்றன.

இதேபோல, ஊர்க்காவல் படை வீரர்கள் கே.சுரேஷ்பாபு, கே.ரமேஷ், பி.புஷ்பா, டி.எம்.அன்பழகன், கே.ரங்கராஜு ஆகியோர் இந்த விருதை பெறுகின்றனர்.

சென்னையில் விரைவில் நடக்க உள்ள விழாவில் இவர்களுக்கு குடி யரசுத் தலைவர் விருதுகளை முதல்வர் பழனிசாமி வழங்குவார் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

SCROLL FOR NEXT