தமிழகம்

ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் விபத்தில்தான் உயிரிழந்தார்: சேலம் சரக டிஐஜி விளக்கம்

செய்திப்பிரிவு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் மரணத்தில் எந்த மர்மமும் இல்லை. அவர் விபத்தில்தான் உயிரிழந்தார் என சேலம் சரக டிஐஜி செந்தில்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

சேலத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டிஐஜி செந்தில்குமார், ''2017-ம் ஆண்டு ஆத்தூர் அருகே நடந்த சாலை விபத்தில் கனகராஜ் உயிரிழந்தார் என்பது நேரடி சாட்சி மற்றும் அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் உறுதியாகி இருக்கிறது.  இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த கனகராஜ் தவறான பாதையில் வாகனத்தில் சென்றதால் விபத்தில் சிக்கினார். அவரது இருசக்கர வாகனம் கார் மீது மோதியதால், கனகராஜ் உயிரிழந்ததாக சாட்சிகள் தெரிவித்தனர்.

வாகனத்தை ஓட்டியபோது, கனகராஜ் மதுபோதையில் இருந்தது, பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது. இதனால், கனகராஜ் மரணத்தில் எந்த மர்மமும் இல்லை. இந்த விபத்து எதிர்பாராமல் நிகழ்ந்ததாக கூறிய கனகராஜின் சகோதரர் தனபால், தற்போது சந்தேகம் எழுப்புவது ஏன் என தெரியவில்லை'' என்றார்.

SCROLL FOR NEXT