தமிழகம்

சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை பொன் மாணிக்கவேலிடம் 7 நாளில் ஒப்படைக்க வேண்டும்

செய்திப்பிரிவு

சிலை கடத்தல் தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நேற்று நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் நடந்தது.

அப்போது  சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் ஆஜராகி, ‘தனக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் தேவையான வசதிகளைசெய்து கொடுக்கவில்லை. வழக்கு ஆவணங்களையும் ஒப்படைக்கவில்லை’ என்றார்.

அப்போது அரசு கூடுதல் வழக்கறிஞர் அரவிந்த்பாண்டியன், சிறப்பு அதிகாரி கோரியபடி அலுவலகம் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது எனக் கூறி டிஜிபியின் அறிக்கையை தாக்கல் செய்தார். அதில் திருச்சியில் அலுவலகம் ஒதுக்கப்பட்டு, 105 போலீஸார் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதையடுத்து நீதிபதிகள், ‘‘சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பாக சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேல் சேகரித்து வைத்திருந்த ஆவணங்கள், வழக்கு டைரிகள் உள்ளிட்ட ஆவணங்களையும் ஒரு வாரத்தில் ஒப்படைக்க வேண்டும்’’ என உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT