தமிழகம்

கூட்டணிக்கு யாரும் வராததால் பாஜக தலைவர்கள் விரக்தி: திருநாவுக்கரசர் கருத்து

செய்திப்பிரிவு

கூட்டணி அமைக்க எந்தக் கட்சியும் முன்வராததால் பாஜக தலைவர்கள் விரக்தியில் உள்ளனர் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

மத்திய பாஜக அரசை அகற்ற வேண்டும் என்பதில் எதிர்க்கட்சிகள் உறுதியாக உள்ளன. உத்தரப் பிரதேசத்தில் பாஜகவுக்கு 60 தொகுதிகளுக்கு மேல் இழப்பு ஏற்படும். கடந்த 2014 தேர்தலில் மத்தியப்பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், சத்தீஸ்கர், கர்நாடகம் போன்ற மாநிலங்களில் பாஜக 80 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களைப் பெற்றது. ஆனால், இந்த முறை அதில் பாதியளவு இடங்களைக்கூட பாஜகவால் பெற முடியாது. எனவே, வரும் தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக வருவதற்கான வாய்ப்பே இல்லை. மக்களவைத் தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைவது உறுதி.

பிரியங்கா காந்தி கடந்த 30 ஆண்டுகளாக அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். 17 வயதிலேயே தந்தை ராஜீவ் காந்தியுடன் தேர்தல் பிரச்சாரம் செய்தவர். அவர் திடீரென அரசியலுக்கு வந்துள்ளதாக கூறுவது தவறு.

கூட்டணிக் கதவுகள் திறந்திருப் பதாக பாஜக கூறி வருகிறது. ஆனாலும், கதவைத் தாண்டி எந் தக் கட்சியும் கூட்டணி அமைக்க முன்வரவில்லை. இதனால் விரக்தி அடைந்த தமிழக பாஜக தலை வர்கள் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களை விமர்சித்து வருகின்றனர். தமிழக பாஜக பரிதாபகரமான நிலையில் உள்ளது.

இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்.

          
SCROLL FOR NEXT