தமிழகம்

தமிழகத்தில் குளிர் அலை; எத்தனை நாள் நீடிக்கும்? - வானிலை ஆய்வாளர் செல்வகுமார் விளக்கம்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் தற்போது வீசி வரும் கடுமையான குளிர் அலை எத்தனை நாள் நீடிக்கும் என தன்னார்வ வானிலை ஆய்வாளர் செல்வகுமார் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது

சோமாலியா அருகே கடல் பகுதியில் காற்றழுத்த சுழற்சி நிலை கொண்டுள்ளது. இது வட இந்தியாவில் நிலவும் குளிர் அலையை ஈர்க்கிறது.  குளிர் அலையை ஒடிசா வழியாக வங்க கடலோர பகுதி வழியாக வேகமாக ஈர்க்கிறது. இதனால் தமிழக கடலோரப்பகுதிகளிலும் தொடர்ந்து குளிர் அலையை ஈர்த்து வருகிறது. இந்தியாவின் மையப்பகுதியில் ‘ஆண்டி சைக்கிலோன்’ எனப்படும் எதிர் நிகழ்வு இருப்பதால் இந்த நிலை காணப்படுகிறது.

இதனால் தமிழகத்தில் கடலில் பனிப்பொழிவுடன் கூடுதலாக குளிர் அலையும் சேர்ந்து வீசுகிறது. இதன் காரணமாகவே சென்னை உட்பட  தமிழகத்தின் பல பகுதிகளிலும் கடுமையான குளிர் வீசுகிறது. வரும் 4-ம் தேதி வரை இந்த நிலை காணப்படலாம். தாய்லாந்து அருகே மற்றொரு புயல் சின்னம் உருவாகி அங்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதற்கும் தமிழகத்துக்கும் தொடர்பு இல்லை. அதனால் தமிழகத்தில் மழை ஏதும் இருக்காது. எனினும் அந்த புயலின் போக்கை பொறுத்து தமிழகத்தில் நிலவும் குளிர் அலையின் போக்கு இருக்கும். ஜனவரி 4-ம் தேதி தான் தாய்லாந்தில் புயல் சின்னம் வலுப்பெறும். எனவே தமிழகத்தில் அதுவரை குளிர் அலை வீசவே வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT